தனி மனித விரோத்ததால் பழிவாங்கப்படும் கிராம மக்கள்

சீனிவாசன்

UPDATED: Jul 18, 2024, 11:48:07 AM

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சி உள்ளது. 

இந்த ஊராட்சியில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர் அப்பானு என்கின்ற மகேஸ்வரனுக்கும் , அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிக்கும் அரசியல் ரீதியாக முன்விரோதம் இருந்து வருகிறது.

இதனால் கடந்த 2 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடந்த கிராம சபா கூட்டம் இந்த ஊராட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணம் காட்டி நடத்தப்படவில்லை.

Latest Nagai District News

இதனால் அந்த ஊராட்சியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் பயனடைய முடியாமல் போராடி வருகின்றனர். 

மேலும் அதே சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி 100 நாள் வேலையையும் அதிகாரிகள் வழங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கலைஞர் கனவு இல்ல திட்ட பணிகளை உடனடியாக தங்களது ஊராட்சியில் துவங்க வேண்டும், நூறுநாள் வேலை திட்ட பணிகளை துவங்க வேண்டும், சிறப்பு கிராம சபா கூட்டத்தை விரைந்து நடத்தவேண்டும் எனக் கூறி தெற்குபொய்கைநல்லூர் ஊராட்சி பொதுமக்கள் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று மனு அளிக்கவந்தனர்.

மாவட்ட ஆட்சியர் இன்று வராத காரணத்தால் மாவட்ட வருவாய் அலுவலருக்காக காலைமுதல் நீண்டநேரம் பொதுமக்கள் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் பேபியிடம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஷ்வரன் உள்ளிட்ட 5 பேர் மட்டுமே மனு அளிக்க அனுமதி அளித்தனர்.

பின்னர் அவர்களிடம் மனுவை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் தன்னிடம் கொடுக்காதீர்கள் கூடுதல் ஆட்சியரிடம் கொடுங்கள் என அவர்களிடம் அலட்சியமாக பதிலளித்து வெளியேற்றினார்.

ஆட்சியர் அலுவலகத்தில் எந்த அதிகாரிகளும் இல்லாததால் மக்கள் ஆவேசம்

இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் அவர்களிடம் சமாதானம் பேசிய நாகூர் காவல் நிலைய ஆய்வாளர் சதீஷ்குமார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கூடுதல் ஆட்சியரிடம் மனு அளிக்க அழைத்து சென்றார்.

ஆனால் அங்கேயும் அதிகாரிகள் இல்லாத காரணத்தால் துறைசார்ந்த அதிகாரிகள் திங்கள்கிழமை முதல் நூறுநாள் வேலை திட்ட பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

NEWS

தொடர்ந்து தங்களது ஊராட்சி விவகாரத்தில் அலட்சியமாக நடந்துகொள்ளும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், 

கலைஞர் கனவு இல்ல பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்றும், 100 நாள் வேலையை உடனடியாக அனைவருக்கும் வழங்க வேண்டும், கிராம சபா கூட்டத்தை விரைந்து நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

 

VIDEOS

Recommended