- முகப்பு
- மாவட்டச் செய்தி
- சீர்காழி அருகே நூறாண்டுகள் பழமையான காத்தாயி அம்மன் கோவிலில் மாயமான ஐம்பொன் சிலைகளை மீட்டுத் தர கிராம மக்கள் புகார் மனு.
சீர்காழி அருகே நூறாண்டுகள் பழமையான காத்தாயி அம்மன் கோவிலில் மாயமான ஐம்பொன் சிலைகளை மீட்டுத் தர கிராம மக்கள் புகார் மனு.
செந்தில் முருகன்
UPDATED: Jun 25, 2024, 8:19:21 AM
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மன்னன் கோவில் கிராமத்தில் ஸ்ரீ மன்னார் சாமி ஸ்ரீ நல்லகாத்தாயி அம்மன் கோவில் உள்ளது.
தனியார் ஒருவரால் கருங்கல் மற்றும் ஓடுகளால் கட்டப்பட்ட நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த கோயிலில் 7 கருங்கல் சிலை 7 ஐம்பொன் உலோக சிலைகள், 2 மர சிலைகள் மற்றும் ஒரு ஏக்கருக்கு மேல் நிலங்கள் கொடுத்து பராமரிக்கபப்ட்டு வந்தது.
இந்நிலையில் 1975 ஆம் ஆண்டு இந்த கோவிலை இந்து சமய அறநிலைத்துறை கையகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கோயில் பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்தது.
தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு சீர்காழியை சேர்ந்த சிவசுப்ரமணியன் என்பவரால் கோவில் திருப்பணி செய்யப்பட்டது.
அதன் பின்னர் கோயிலில் உள்ள நான்கு சிலைகள் சிவசுப்பிரமணியத்திடம் தினக்கூலியாக வேலை செய்த பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஐந்து பேர் கோவில் இடத்தை ஆக்கிரமித்து கோயில் இடத்திற்கு வாடகை செலுத்தாமல் குடியிருந்து கொண்டு மேலும் 25 சென்ட் நிலத்தை ஆக்ரமிக்க முயற்சி செய்வதாக குற்றம்சாட்டி ஏனங்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் வீரமணி என்பவர் புகார் மனு அளித்துள்ளார்.
கோயிலுக்கு அறங்காவலர் நியமித்து ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்களை மீட்டெடுத்து வாடகை நிர்ணயம் செய்து ஐம்பொன் சிலைகளை மீட்டு தர வேண்டும் என்று ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் வீரமணி இந்து சமய அறநிலை துறை இணை ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனவில் குறிப்பிட்டுள்ளார்.