• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மின் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியில் இல்லாத நபர் மின்விபத்தில் சிக்கி படுகாயம்.

மின் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியில் இல்லாத நபர் மின்விபத்தில் சிக்கி படுகாயம்.

முகேஷ்

UPDATED: Jun 18, 2024, 7:46:30 PM

கன்னியாகுமரி மின் பகிர்வு பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட கன்னியாகுமரி மற்றும் அதனை சுற்றியுள்ள சின்னமுட்டம் கோவளம், லீபுரம், சுவாமிநாதபுரம், பல்வேறு பகுதிகளில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை அமலில் இருந்தது. 

இதையொட்டி இப்பகுதியில் உள்ள மின் மாற்றி, உயர் அழுத்த மின் கம்பிகளில் உள்ள பழுதுகளை சரி பார்க்கும் பணியில் இன்று நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்களுடன் சில தனியார் எலக்ட்ரீசன்களும் ஈடுபட்டுள்ளனர். 

இதில் ஜீரோ பாயிண்ட் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த குண்டல் பகுதியைச் சேர்ந்த வரதன் என்ற வாலிபர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி எறியப்பட்டுள்ளார்.

இதில் அந்த வாலிபரின் கால்கள் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

எந்தவித உயிர் பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாமல் தனி நபர் ஒருவரை கன்னியாகுமரி மின்சார வாரியம் பணியில் அமர்த்திய செயல் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.

 

VIDEOS

Recommended