- முகப்பு
- மாவட்டச் செய்தி
- வாலாஜாபாத் அருகே கனரக லாரியின் பின்புறத்தில் மோதிய டாராஸ் லாரின் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலி.
வாலாஜாபாத் அருகே கனரக லாரியின் பின்புறத்தில் மோதிய டாராஸ் லாரின் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே பலி.
லட்சுமி காந்த்
UPDATED: May 20, 2024, 4:56:45 AM
ஆந்திர மாநிலத்திலிருந்து கடப்பா கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு கனரக வாகனம் காஞ்சிபுரம் வாலாஜாபாத் சாலையில் வெங்குடி கிராமத்தின் வழியாக சென்று கொண்டிருந்தது.
அப்போது அதே மார்கமாக சரளை கற்களை ஏற்றிக்கொண்டு ஒரு டாரஸ் லாரி மிக வேகமாக வந்து கொண்டிருந்தது.
வேகமாக வந்த டாரஸ் லாரி வெங்குடி அருகே தஞ்சுமா ஓடை என்ற இடத்தில் முன்னாள் சென்று கொண்டிருந்த ஆந்திர பிரதேச லாரியின் மீது மிகுந்த வேகத்துடன் மோதியது.இதில் டாரஸ் லாரியின் முன்பகுதி சுக்கு நூறாக அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் வெங்குடி பகுதியை சேர்ந்த பொன்ராஜ் என்ற டாரஸ் லாரி ஓட்டுனர் (வயது 22) சம்பவ இடத்திலேயே இடுப்பாடுகளுக்கு மத்தியில் சிக்கி துடிதுடித்து இறந்து போனார்.
இடிப்பாடுகளுக்கு மத்தியில் சிக்கியிருந்த பொன்ராஜியின் சடலத்தை சுமார் இரண்டு மணி நேரமாக போராடி வாலாஜாபாத் காவல் துறையினர் மீட்டனர்.
விடியற்காலையில் நடந்த இந்த விபத்து குறித்து வாலாஜாபாத் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு