• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தமிழக அரசு பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் ஆகியும் இதுவரை பின்னடைவு காலி பணியிடங்களை நிரப்பவேயில்லை.

தமிழக அரசு பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் ஆகியும் இதுவரை பின்னடைவு காலி பணியிடங்களை நிரப்பவேயில்லை.

லட்சுமி காந்த்

UPDATED: Jul 2, 2024, 6:30:39 PM

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில் பழங்குடி இருளர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா ,தொகுப்பு வீடு மற்றும் ஜாதி சான்று கேட்டு மாவட்ட தலைவர் கே.செல்வம் தலைமையில் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நடைபெற்ற இந்த பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.சண்முகம் அவர்கள் கலந்து கொண்டு 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது.

அதில் அனைத்து பழங்குடி மக்களுக்கு இனச்சான்று வழங்கிடுவும்,2006 வன உரிமைச் சட்டத்தின்படி அனுபவ நிலங்களுக்கு மனு செய்த அனைவரும் பட்டா வழங்கிடுவும், வீட்டுமனைப்பட்டா வழங்கி தொகுப்பு வீடுகள் வழங்கிடவும், உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு சாதி சான்று நிபந்தனை இல்லாமல் வழங்கிட வேண்டியும்,

12ம் வகுப்பு படித்த இருளர் மாணவர்கள் உயர்கல்வி படிக்க கல்லூரிகளில் போதுமான இடங்களை ஒதுக்கீடு செய்திட வேண்டியும், தொகுப்பு வீடுகள் தரமாக கட்டி கொடுக்க வேண்டியும் , குண்டுகுளம் ஊத்துக்காடு, சிங்காடிவாக்கம், மலையாங்குளம், காட்டரம்பாக்கம் ஆகிய கிராமங்களில் இருளர் மக்களுக்கு கட்டி கொடுக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் சுடுகாடு வசதி செய்து கொடுக்க வேண்டியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களுக்கு சண்முகம் அவர்கள் அளித்த பேட்டி, முதலாளிகளுக்கு நிலம் வழங்குவதற்கு நிலவள வங்கியை தொடங்கிய தமிழக அரசு, தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் இன மக்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்கு ஒரு நிலவள வங்கியை ஏற்படுத்த வேண்டும் எனவும் , பழங்குடியினர் மற்றும் இருளர் இன மக்களுக்கு பட்டா வழங்குவதற்கு யோசனை செய்கின்ற அதிகாரிகள், தொழிற்சாலைகளுக்கு மிக சுலபமாக வழங்குவது ஏன் என்றார். 

மேலும் பழங்குடியினர் மக்களுக்கு நிலம் வழங்குவதற்கு தமிழக அரசுக்கு கசக்கிறது. பட்டியலின பழங்குடியின மக்களுக்கு தமிழகம் முழுவதும் நிலம் எடுத்து வழங்குவதற்கு ஒரு நிலவள வங்கியை உருவாக்க வேண்டும் எனவும், தற்போது பத்திரப்பதிவு செய்தால் தானாகவே பட்டா வந்துவிடும் என அரசாங்கம் கூறுகிறது .

ஆனால் பழங்குடியினர் பட்டியிலின மக்களுக்கு நிலம் பட்டா வேண்டும் என்றால் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் எனவும் கல்வி அறிவு இல்லாத மக்களை அரசாங்கம் வலியுறுத்துவது தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே வாங்கிய பட்டாவை ஆன்லைனில் பதிவு செய்து புதுப்பிப்பிக்க வேண்டும் என்பது முறையற்ற செயல்.

அதனால், ஏற்கனவே பழங்குடியின மக்களுக்கு வழங்கிய சான்றிதழை அரசாங்கமே ஆன்லைனில் புதுப்பித்து தர வேண்டும் எனவும் பழங்குடியின மக்களை அலைக்கழிக்க கூடாது எனவும் , நேரடியாக விண்ணப்பித்தாலும் ஆன்லைனில் விண்ணப்பித்தாலும் பழங்குடியினர் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றார்.

மேலும் பழங்குடியினர் இன பின்னடைவு காலி பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. தமிழக அரசு பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை பின்னடைவு காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. உடனே அதனை நிரப்பப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மலைவாழ் மக்கள் நடத்திய பேரணியில் சுமார் 500க்கும் மேற்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.

பேட்டி. பி.சண்முகம், மாநிலத் தலைவர், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்.

 

VIDEOS

Recommended