• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ரேஷன் கடையில், பொருட்களை திருடுவதற்கு வாய்ப்பாக ஜன்னல் கதவை திறந்து விட்டு சென்ற விற்பனையாளர்

ரேஷன் கடையில், பொருட்களை திருடுவதற்கு வாய்ப்பாக ஜன்னல் கதவை திறந்து விட்டு சென்ற விற்பனையாளர்

லட்சுமி காந்த்

UPDATED: May 19, 2024, 1:01:49 PM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 150 க்கும் மேற்பட்ட நியாய விலை கடைகள் இயங்குகின்றது. காஞ்சிபுரம் நகரில் மட்டும் 46 கடைகள் செயல்படுகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பஞ்சுப் பேட்டை 1 வது வார்டு ஏகாம்பரபுரம் மேற்கு தெருவில் அரசு நியாயவிலைக் கடை இயங்கிவருகின்றது. சுமார் 900க்கும் மேற்பட்டவர்கள் இந்த கடையில் பொருட்களை வாங்கி வருகின்றனர்.

கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இந்த பகுதியில் ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய் ,கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நம்பி தான் மக்கள் இருக்கின்றனர்.

இவ்வளவு முக்கியத்துவம் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. அதை பின்பற்றாமல் பல ரேஷன் கடைகளில் பொருட்கள் திருடு போகின்றது. 

காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட பஞ்சுப்பேட்டை ஒன்றாவது வார்டு ஏகாம்பரபுரம் மேற்கு தெருவில் பள்ளிக்கூடம் அருகே உள்ள நியாய விலை கடையின் இரும்பாலான முன் கதவு பூட்டப்பட்டுள்ள நிலையில், பக்கவாட்டு சுவற்றில் உள்ள ஜன்னல் திறந்தே உள்ளது.

அவ்வாறு திறந்தே உள்ள ஜன்னலில் , கையை உள்ளே விட்டு கல்லாப்பெட்டியில் பணம் திருடவும், அரிசி, சர்க்கரை, பாமாயில் ,பருப்பு ,சோப்பு உள்ளிட்ட பொருட்களை களவாடவும், 

சமூக விரோதிகள் நெருப்பை உள்ள தூக்கிப் போடவும், மழை வந்தால் ரேஷன் கடையில் உள்ள அனைத்து பொருட்களும் நனைந்து சேதமாகவும் வாய்ப்பு உள்ளது.

திறந்துள்ள ஜன்னல் வழியை எவ்வளவோ பிரச்சனைகள் நடக்க வாய்ப்பு உள்ள போது, ரேஷன் கடையின் முன்பக்க கதவை பூட்டிவிட்டு சைடில் இருக்கும் ஜன்னல் கதவை மூடாமல் போனது ஏதோ திட்டமிட்டு செய்து போல தோன்றுகின்றது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

மேலும் அந்தக் கடையின் விற்பனையாளராக ஒரு மாத காலமே பணியாற்றும் கருணாகரன் என்பவர், மக்களின் வாழ்வாதாரமாக கருதப்படும் நியாய விலை கடையின் பாதுகாப்பை பற்றி சற்றும் கண்டு கொள்ளாமல் கடையை மட்டும் பூட்டுவிட்டு சென்றது தவறு நடக்க வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளார் என தோன்றுகின்றது எனவும் அப்பகுதி மக்கள் வேதனைடன் கூறுகின்றனர்.

 

VIDEOS

Recommended