• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் வார்டே கடந்த 2 ஆண்டுகளாக சேறும் சகதியமாக காட்சியளிக்கும் அநியாயம். 

காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் வார்டே கடந்த 2 ஆண்டுகளாக சேறும் சகதியமாக காட்சியளிக்கும் அநியாயம். 

லட்சுமி காந்த்

UPDATED: Jun 8, 2024, 6:47:35 PM

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 1 வது வார்டு பஞ்சுபேட்டை பெரிய தெரு நகரின் நுழைவு வாயிலாக உள்ளது. நகரின் பல பகுதிகளுக்கு செல்கின்ற வகையில் இந்த பெரிய நீண்ட சாலை அமைந்துள்ளது .

பஞ்சுப்பேட்டை பெரிய வீதியில் முப்பதுக்கு மேற்பட்ட குறுக்குத் தெருக்கள் உள்ளனர். ஒவ்வொரு குறுக்குத் தெருக்களிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த சாலையில் ஆரம்ப சுகாதார மையம் , துணை மின் நிலையம் , மத்திய அரசின் ஆதரவற்றோர் தங்கும் விடுதி , பிரசித்திபெற்ற சிவன் கோவில் உள்ளிட்டவை உள்ளன. 

காஞ்சிபுரம் மாநகரத்தின் நுழைவு வாயிலாக விளங்கும் இப்பகுதியின் மாமன்ற உறுப்பினராக திமுக கட்சியை சார்ந்த பெண் உறுப்பினர் உள்ளார். மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு இரு முறை மட்டுமே வார்டுக்கு வந்துள்ளார் என அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர்.

இதனாலேயே இவருடைய வார்டை மேயர் மகாலட்சுமி யுவராஜ் முற்றிலும் புறக்கணித்து உள்ளார். அதனால் அதிக மக்கள் வசிக்கும் முதல் வார்டே ஆங்காங்கே சேறும் சகதியுமாக , குப்பை மேடாக மிகவும் அலங்கோலமாக காட்சியளிக்கின்றது.

இந்நிலையில் பஞ்சுப்பேட்டை பெரிய தெருவின் மையத்தில் உள்ள குறுக்குத் தெருவில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் பொங்கி சாலை முழுவதும் ஓடி சேரும் சகதியமாக மிகவும் அலங்கோலமாக காட்சியளித்து வருகின்றது.

இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கும் சிறுவர் சிறுமிகளுக்கும் முதியோர்களுக்கும் அவ்வப்போது வயிற்றுப்போக்கு ,காய்ச்சல், மூக்கடைப்பு போன்ற வியாதிகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது. அதே பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் உள்ளதால் இப்பகுதி மக்கள் அங்கு சிகிச்சை பெற்று தற்காலிகமாக குணமடைந்து வருகின்றனர்.

இந்த குறுக்குசாலையில் சுமார் 5 அங்குலம் உயரத்துக்கு தேங்கியுள்ள சேற்றையும் சகதியையும் அற்புறப்படுத்த, பல முறை கவுன்சிலரை நேரில் சந்தித்து அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் இது நாள் வரையில் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே, அவர் கண்டு கொள்ளாமல் உள்ளார் என அப்பகுதி மக்கள் மிகுந்த ஆவேசமாக தெரிவிக்கின்றனர்.

அவ்வப்போது அப்பகுதி மக்களே வீடு வீடாக சென்று அங்குள்ள மக்களிடம் பணத்தை வசூல் செய்து, "தமக்குத் தாமே துணை என்ற கோணத்தில்" அங்கு சேர்கின்ற கழிவு நீரையும் சேற்றையும் சகதியையும் அள்ளி வருகின்றனர். தொடர்ந்து நாங்களே எங்கள் பணத்தை கொண்டு செலவு செய்வற்க்கு, கவுன்சிலர் எதற்கு? மாநகராட்சி எதற்கு? அரசாங்கம் எதற்கு என கேள்வி எழுப்புகின்றனர்.

அப்பகுதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவர் பேசும்போது, எந்த விதமான விசேஷங்களுக்கும் எங்களுடைய உறவினர்கள் எங்கள் வீட்டுக்கு வர மறுக்கின்றார்கள் . ஏற்கனவே ஒரு முறை வரும்போது இங்கே சேற்றில் வழுக்கி கீழே விழுந்து விட்டார்கள். அதனால் முக்கிய விசேஷங்களுக்கு அழைத்தால் கூட வர மறுக்கின்றார்கள் .நாங்கள் நடந்து போகவே மிகவும் கஷ்டமாக உள்ளது என கூறினார்.

இது தொடர்பாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு பலமுறை தொடர்பு கொண்டு புகார் அளித்தும் மாநகராட்சி இதைக் கண்டு கொள்ளாமல் உள்ளது மிகுந்த வேதனை உண்டாக்குகின்றது என பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

மேலும் பள்ளிக்கூடங்கள் வருகின்ற பத்தாம் தேதி அன்று திறக்க உள்ள நிலையில் இன்னும் இரண்டு நாளிலேயே இந்த சேற்றை அப்புறபடுத்த வேண்டும், இல்லாவிட்டால் இப்பகுதியில் உள்ள 70க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் சேற்றில் வழுக்கி விழும் அபாயம் உள்ளது என தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended