வீட்டு வாடகை செலுத்தாததால் மாடிப்படியை உடைத்த வீட்டு உரிமையாளர்.

லட்சுமி காந்த்

UPDATED: Jun 18, 2024, 8:12:45 PM

காஞ்சிபுரம் விளக்கடிகோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் இவர் ஆப்செட் நிறுவனம் நடத்தி வருகிறார்.

அவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வானவில் நகர் பகுதியில் சொந்தமான வீடு உள்ளது.

இங்கு மேல் மாடியில் வேணுகோபால் என்பவர் தனது மனைவி லீலா வேணுகோபால் தம்பி பாபு மற்றும் மகள் மகாலட்சுமி அவரது இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

வேணுகோபால் திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலே இருந்து வருகிறார்.

முறையாக பாபு வாடகை செலுத்தாததால் இவரை குடியிருப்பில் இருந்து காலி செய்ய வீட்டு உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதனிடையில் பாபு வழக்கறிஞர் உதவியுடன் வீட்டின் உரிமையாளர்கள் பேசி கால அவகாசம் வாங்கிய நிலையில் கடந்த ஆறு மாத காலமாக வாடகை செலுத்தவில்லை. 

பலமுறை கேட்டும் வீடு காலி செய்ய மறுத்த நிலையில் இன்று கட்டுமான உதவியாளர் 10 நபர்களுடன் வீட்டின் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளை இடித்து இணைப்பை துண்டித்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் காவல்துறையின் அவசர உதவியான 100 க்கு அழைத்து புகார் தெரிவித்ததின் பேரில் காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு மேலும் வீட்டில் உள்ள நபர்களை பாதுகாப்பாக அழைத்து வர காஞ்சிபுரம் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்டனர்.

 

VIDEOS

Recommended