காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுபாடா ? 

லட்சுமி காந்த்

UPDATED: Jun 2, 2024, 5:17:36 AM

காஞ்சிபுரம் அடுத்த புஞ்சை அரசந்தாங்கல் பகுதியில் , கோடை வெயிலில் அவதிப்பட்டு வருகின்ற மக்களுக்கு, குடிநீர் விநியோகம் சரி வர அளிக்காததால் அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாகவே கடும் சிரமங்களுக்கு ஆளாகி வந்திருக்கிறார்கள். 

இந்த நிலையில் இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி கே.கே நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடியிருக்கும் மக்களுக்கு கடந்த பத்து தினங்களாக சரிவர குடிநீர் கிடைக்காததால் பல இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். 

அதுமட்டுமல்லாமல் பாலற்றை ஒட்டிய பகுதியிலேயே குடியிருக்கும் புஞ்சை அரசந்தாங்கல் பகுதி மக்களுக்கு கூட குடிநீர் விநியோகம் சரி வர கிடைக்காததால் பலமுறை புகார் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனையெடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாக தெரிவித்ததையடுத்து அப்பகுதி மக்கள் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தினை கைவிட்டனர். 

அதிக நீர் வளம் மிகுந்த பாலாற்று படுகை அருகே வசிக்கும் எங்களுக்கே குடிநீர் சரிவர அளிப்பதில்லை ? அப்படி இருக்கும்போது எப்படி மற்றவர்களுக்கு எப்படி இவர்கள் குடித்தண்ணீர் முறையாக விநியோகம் செய்வார்கள் என கேள்வி எழுப்பினர்.

 

VIDEOS

Recommended