மீனவர் பிரச்சினை குறித்து தெரிவிக்க முதல் அமைச்சரை சந்திக்க அனுமதி கோரி கலெக்டரிடம் மனு

கார்மேகம்

UPDATED: Jul 9, 2024, 11:55:20 AM

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை‌ செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் தமிழக முதல் அமைச்சரை சந்திக்க அனுமதி கோரி அனைத்து நாட்டுப்படகு மீனவர்கள் கூட்டமைப்பு  சார்பாக ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

( மீனவர்கள் சிறைப்பிடிப்பு) பாம்பன் தொண்டி பகுதியில் இருந்து கடந்த 01/07/2024 ல் மீன்பிடிக்க சென்ற 4 நாட்டுப்படகு மற்றும் 25 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Latest District News Tamil

இதனிடையே இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாட்டுப்படகு மற்றும் 25  மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவும் இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்கவும் மீனவர்கள் பிரச்சினை குறித்து தமிழக முதல் அமைச்சரை நேரில் சந்தித்து பேச அனுமதி  பெற்றுத் தர வலியுறுத்தி கலெக்கடை சந்தித்து மனு அளித்தனர்.

( கலெக்டரிடம் மனு)

அதன்படி நேற்று பாம்பனில் இருந்து நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் ராயப்பன் ம.தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளர் பேட்ரிக் மற்றும் மீன்பிடி தொழில் சங்க நிர்வாகிகள் கருணாமூர்த்தி முருகானந்தம் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

இவர்கள் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்

இந்த மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக  உறுதி அளித்தார். 

 

VIDEOS

Recommended