- முகப்பு
- மாவட்டச் செய்தி
- வருகின்ற காலகட்டங்களில் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் போர் ஏற்படலாம் தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா.
வருகின்ற காலகட்டங்களில் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் போர் ஏற்படலாம் தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா.
மாரியப்பன்
UPDATED: Jun 14, 2024, 12:58:34 PM
பெரம்பலூரில் செயல்பட்டு வரும் தனியார் (தனலட்சுமி ஸ்ரீனிவாசன்) பல்கலைக்கழகத்தில் மூன்று நாள் வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது.
இந்த வேளாண் கண்காட்சியை இன்று காலை தமிழ்நாடு வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா துவக்கி வைத்து பேசினார்.
அப்போது பேசிய அவர் வேளாண்மை சார்ந்த படிப்புகளை பயிலும் மாணவர்கள் அதனை ஒரு பட்டப் படிப்பாக மட்டுமே பார்க்கின்றனர்.
தொடர்ந்து அந்த துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதில்லை, அதனை விட்டு தாங்கள் படித்த படிப்பினை அந்த துறைக்கு பயன்படும் வகையில் செயல்பட வேண்டும்.
மேலும் வருகின்ற காலகட்டத்தில் போர் நடைபெறுகிறது என்றால் அது உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் தான் இருக்கும்.
எனவே உணவு உற்பத்தி என்பது அத்தியாவசியமான ஒரு செயல் என்பதால் அனைவரும் உணவு உற்பத்தியிலும் விவசாயத்திலும் ஈடுபட வேண்டும். அது புண்ணியமான காரியம் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் தனியார் மற்றும் வேளாண் துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் தனியார் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அருண்நேரு, சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இந்த கண்காட்சி மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ள நிலையில், பல்வேறு தலைப்புகளில் துறை சார்ந்த அலுவலர்கள் வல்லுநர்கள் பேச உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.