• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மூணார் மாட்டுப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட குண்டுமலை எஸ்டேட் பகுதிகளில் சாலையை காணவில்லை மேடுபள்ளங்களாக காட்சி அளிக்கிறது.

மூணார் மாட்டுப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட குண்டுமலை எஸ்டேட் பகுதிகளில் சாலையை காணவில்லை மேடுபள்ளங்களாக காட்சி அளிக்கிறது.

ராஜா

UPDATED: Jul 6, 2024, 7:31:35 PM

District News & Updates in Tamil

இடுக்கி மாவட்டம் மூணார் அருகே மாட்டுப்பட்டி பஞ்சாயத்து பகுதிகளில் பெரும்பாலும் சாலை வசதிகள் இல்லாமல் அவசரத் தேவைக்கு கூட உடனே செல்ல முடியாமல் தோட்டத் தொழிலாளர்கள் வேதனை அடைகின்றனர்.

மூணார் உடுமலைப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லக்கூடிய 9ம் மைல் இருந்து குண்டுமலை பகுதிவரை சாலை மிகவும் தர மற்றும் மோசமாகவும் உள்ளது.

சில இடங்களில் சாலையாகவே இருக்காது பெரும்பாலும் பள்ளம் நிறைந்தே காணப்படும் குறிப்பாக இது மலைப்பாதையாகவே இருக்கக்கூடும்

Latest District news in tamil 

இந்த வழிப் பாதையை பயன்படுத்தி தான் அப்பகுதிகளில் வாழும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எந்த ஒரு அவசர காலமாக இருந்தாலும் சரி இப்பாதையில்தான் பயணம் செய்து வருகின்றனர்.

இதில் பயணம் செய்யும்போது அவ்வப்போது காட்டு மாடுகள் யானைகள் ஆங்காங்கே நின்று கொண்டிருக்கும் அதனை கவனிக்கும் ஓட்டுநர் திடீரென வண்டியை நிறுத்த முற்பட்டால் அப்போதே பள்ளமேடு தெரியாமல் விட்டு வாகனம் விபத்துக்கு உள்ளாக நேரிடுகிறது.

தேயிலை தோட்டங்களில் வேலை செய்யும் தோட்ட தொழிலாளர்கள் ஏதேனும் மருத்துவ அவசர உதவிக்கு செல்ல வேண்டுமென்றால் குண்டுமலை அப்பரில் இருந்து 30 கிலோமீட்டர் உள்ள மூணார் பகுதிக்கு தான் செல்ல வேண்டும்.

Theni News

இது போன்ற சாலையில் வெகு விரைவாக வாகனம் இயக்கி கொண்டு செல்ல முடியாமல் ஓட்டுநர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதால் நோயாளிகளுக்கும் சில காலகட்டங்களில் உயிரிழப்பு ஏற்படக்கூட வாய்ப்பு உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகமும் பஞ்சாயத்து நிர்வாகமும் எங்களுக்கு முறையான சாலை வசதி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

VIDEOS

Recommended