• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பொன்னேரி அருகே ஆமூர், ஆதவன் நகரில் அனுமதி பெறாமல் நடத்தப்படும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் மாசுவால் பொதுமக்கள் அவதி.

பொன்னேரி அருகே ஆமூர், ஆதவன் நகரில் அனுமதி பெறாமல் நடத்தப்படும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் மாசுவால் பொதுமக்கள் அவதி.

முருகன்

UPDATED: Jun 28, 2024, 12:19:13 PM

திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட ஆமூர் ஆதவன் நகரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த இடத்தில் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் காயலான் கடை போல தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்துள்ளது.

இந்த தொழிற்சாலைக்குள் பழைய கார்கள் கொண்டு வரப்பட்டு அதனை பிரித்து எடுக்கும் பணிகள் நடைபெறுவதாகவும், இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகை மற்றும் ரப்பர் டயர் ஆகியவற்ற எரித்து அதிலிருந்து வெளியேறும் புகை மண்டலம் வசிக்கும் வீடுகளுக்குள் புகுந்து அதனால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு பொதுமக்கள் ஆளாகியுள்ளனர்.

மேலும் கனரக வாகனங்கள் பழைய பொருட்களை எடுத்துக்கொண்டு இந்த தொழிற்சாலைக்குள் இந்த கிராமத்திற்குள் உள்ள சிறிய தெரு வழியாக செல்வதால் அதிலிருந்து விழும் ஆணிகள்,தகடுகள் உள்ளிட்ட ஸ்கிராப் தெருக்களில் சிதறி விழுகிறது.

அத்தெருவில் வசிக்கும் மக்கள் இரு சக்கர வாகனங்கள்,நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது அவர்களின் வாகனங்களின் டயர் பஞ்சர் ஆகிவிடுவதும் இதனால் சரியான நேரத்திற்கு வேலைக்கு மற்றும் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும்

குழந்தைகளின் கால்களில் இந்த ஸ்கிராப் பட்டு காயங்கள் ஏற்படுவதாகவும் எந்நேரமும் இந்த கனரக வாகனங்களால் விபத்து ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாகவும் வயதானவர்கள் நோயாளிகள் இதனால் பெரும் பாதிப்புக்கு உள்ளதாகவும் கூறி பலமுறை காவல்துறை மற்றும் அரசு துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர்.

இறுதியாக தற்போது நடப்பெற்று வரும் ஜமாபந்தியில் ஜமாபந்தி அலுவலர் அவர்களிடம் இது குறித்து புகார் மனு அளித்ததன் பேரில் பொன்னேரி சார் ஆட்சியரும் ஜமாபந்தி அலுவலருமான வாகே சங்கெத் பல்வந்த் நேரில் தொழிற்சாலைக்குள் சென்று ஆய்வு நடத்தினார்.

அப்போது பொதுமக்கள் இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அவரிடம் கோரிக்கை வைத்தனர்.

 

VIDEOS

Recommended