- முகப்பு
- மாவட்டச் செய்தி
- டன் கணக்கில் கோழி இறைச்சி கழிவுகளை ஏற்றிச் சென்ற கண்டெயினரை விரட்டிச் சென்று தடுத்து நிறுத்திய பொதுமக்கள்.
டன் கணக்கில் கோழி இறைச்சி கழிவுகளை ஏற்றிச் சென்ற கண்டெயினரை விரட்டிச் சென்று தடுத்து நிறுத்திய பொதுமக்கள்.
சண்முகம்
UPDATED: Jul 9, 2024, 12:53:25 PM
Latest District News in Tamil
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை பேருந்து நிறுத்த பகுதியில் பொதுமக்களில் சிலர் கன்டெய்னர் சாலையில் வந்து கொண்டிருந்ததை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இதனைப் பார்த்த மற்றவர்கள் ஏதோ ஆக்சிடென்ட் நடந்து விட்டதோ அதற்காகத்தான் பொதுமக்கள் சத்தம் போடுகிறார்கள் என்று நினைத்தனர்.
District News & Updates in Tamil
ஆனால் உண்மையில் அந்த கண்டெய்னர் உள்ளே கடும் துர்நாற்றம் வீசக்கூடிய பொருட்கள் இருக்கிறது என்று வெளியே நின்ற வர்களுக்கு அதன் துர்நாற்றமே சொல்லியது. அந்த கண்டெயினரிலிருந்து கீழே தண்ணீர் சொட்டிக்கொண்டும் கடுமையான துர்நாற்றம் வீசியது.
அப்போதுதான் பொதுமக்களில் சிலர் கண்டெய்னர் ஓட்டுனரிடம் நேராக வாகனத்தை ஸ்டேஷன் கொண்டு செல் என்று கூறினர். ஆனால் கண்டெய்னர் ஓட்டி வந்தவரோ நீண்ட நேரம் தாமதப்படுத்திக் கொண்டு பிறகு வேறு வழி இல்லாமல் கண்டெய்னரோடு வாகனத்தை ஸ்டேஷன் கொண்டு போய் நிறுத்தினார்.
இந்த கண்டெய்னர் உள்ளே கோழி இறைச்சி கழிவுகள் இருப்பதாகவும் இதனை கும்பகோணத்தில் இருந்து ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்படுவதாக அதன் ஓட்டுனர் தெரிவித்தார்.
District News Tamil
இது குறித்து விசாரித்த போலீசாரோ கண்டெய்னர் வாகனம் ஸ்டேஷன் முன்பாக நின்றபோது வீசிய துர்நாற்றத்தை கண்டு மயக்கம் வராத குறையாக வாகனத்தை ஸ்டேஷன் கொண்டு வந்த பொதுமக்கள் முன்னிலையே உங்களுக்கு ஏன் வேண்டாத வேலை பேசாமல் வீட்டிற்கு செல்லுங்கள் என்று கூறி, கண்டெய்னர் வாகனத்தை அப்படியே திருப்பி அனுப்பினர்.
அந்த வாகனமும் வெகு வேகமாக புறப்பட்டு சென்றது. இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கும் போது பல கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று இந்த துர்நாற்றம் வீசும் வாகனத்தை இதற்கு மேல் ஒட்டி செல்லக்கூடாது என்று தடுத்துதான் ஸ்டேஷன் கொண்டு போக சொன்னோம்.
ஆனால் போலீசாரோ கொஞ்சம் கூட அக்கறையில்லாமல் அந்த வாகனத்தை சோதனை செய்யாமலும் நடவடிக்கை எடுக்காமலும் திருப்பி அனுப்பி விட்டனர்.
latest news & live updates
இதனால் பல்வேறு கேடுகள் ஏற்படும். ஆந்திரா கொண்டு செல்கிறோம் என்று கூறிவிட்டு தமிழ்நாட்டில் ஏதோ ஒரு இடத்தில் இந்த கழிவுகள் கொட்டப்படலாம். போலீசார் இதனை தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. இது தங்களுக்கு வேதனை அளிக்கிறது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இதுபோன்ற வாகனங்களை சோதனை செய்ய வேண்டிய உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுற்றுப்புற சூழல் துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் எனவும் கேள்விகளையும் எழுப்பினர்.