விவசாயிகள் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள நிர்வாக பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகை.

JK

UPDATED: Jun 28, 2024, 10:20:52 AM

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள நிர்வாக பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு உடனடியாக விவசாயிகளுக்கு நீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தினர்.

தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.

தொடர்ந்து அலுவலகத்தில் இருந்து பேரணியாக துறையூர், முசிறி பகுதிகளில் வரும் அய்யாறு துணை வாய்க்கால்களை ஆக்கிரமித்து அழிப்பதை சீர் செய்ய வேண்டும், வேளாண் விஞ்ஞானிகளும், வேளாண் அறிஞர்களும் விவசாயிகள் வயலில் ஒரே பயிரை சாகுபடி செய்தால் நிலத்தின் தன்மை மாறி பயிர்கள் நன்றாக வளராமல் குறைந்த அளவே விளைச்சல் கிடைக்கும் என கூறிவிடும் நிலையில்

திருச்சி வருவாய்த்துறை நீதிமன்ற நீதிபதி நெல்லை தவிர வேறு பயிர்களான வாழை, கரும்பு, வெற்றிலை சாகுபடி செய்தால் நிலத்திற்கு கேடு விளையும் என கூறியுள்ளார்.

அந்த நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்திய விவசாயிகளை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் மனு அளித்தனர்.

 

VIDEOS

Recommended