- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மன்னார்குடியில் வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடியில் வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருண் சுரேஷ்
UPDATED: Jul 10, 2024, 10:39:54 AM
Latest District News in Tamil
ஒன்றிய அரசு இந்திய தண்டனை சட்டம் , குற்றவியல் நடைமுறை சட்டம் , இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருதத்தில் மாற்றம் செய்ததுடன் சட்டப் பிரிவுகளின் எண்களையும் மாற்றம் செய்துள்ளது. இது நாடெங்கும் வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Latest Trichy News Headlines & Updates
இதையடுத்து இந்த 3 சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் , நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
Latest Trichy District News
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வழக்கறிஞர்கள் மன்னைநகரில் இருந்து பேரணியாக சென்று இரயில் நிலையத்தில் மன்னார்குடியில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரயிலை மறித்து ஒன்றிய அரசை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒன்றிய அரசு இந்த மூன்று சட்டத்தின் திரும்பப் பெறாவிட்டால் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் .
ALSO READ | பாலியல் தொல்லை இரு ஆசிரியர்கள் இடை நீக்கம்
இதனையடுத்து இரயில் மறியலில் ஈடுபட்ட அனைத்து வழக்கறிஞர்களையும் மன்னார்குடி காவல்துறையினர் கைது செய்து தணியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.