- முகப்பு
- மாவட்டச் செய்தி
- வீராணம் ஏரி மற்றும் சுற்றுப்புற பகுதி கிராமங்களில் மயில்களுக்கு தொடரும் ஆபத்து கண்காணிக்குமா வனத்துறை?
வீராணம் ஏரி மற்றும் சுற்றுப்புற பகுதி கிராமங்களில் மயில்களுக்கு தொடரும் ஆபத்து கண்காணிக்குமா வனத்துறை?
சண்முகம்
UPDATED: May 19, 2024, 5:39:14 AM
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி கிராமங்களான வாழக்கொல்லை, வெய்யலூர், கோதண்டவிளாகம், உள்ளிட்ட இருபதுக்கு மேற்பட்ட கிராமப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மயில்கள் இருந்து வருகின்றன.
இவை காலை மற்றும் மாலை வேலைகளில் பசுமை நிறைந்த பகுதிகள் மற்றும் நீர் நிறைந்த பகுதிகளில் தங்களுக்கான உணவை தேடி வலம் வருகின்றன. அவ்வாறு வலம் வரும் மயில்களை பார்க்கவே ரம்மியமாகவும், கண்கொள்ள கட்சியாகவும் இருக்கின்றன.
இவற்றை இதனை கடந்து செல்பவர்கள் நீண்ட நேரம், நேரம் போவதே தெரியாமல் பார்த்துக் கொண்டு இருப்பதும், தங்களது செல்போன்களில் படம்பிடித்து செல்வதும் நடந்து வருகிறது.
இவ்வாறான நிலையில் மயில்கள் சரியான வசிப்பிடம் இல்லாததால் அவை வசிக்கும் பகுதிகளிலிருந்து சாலை , மற்ற இடங்களை கடக்க முற்படும் போது அதிக விபத்துகளில் சிக்கி வருகின்றன. மேலும் இதனை மர்ம நபரகள் வேட்டையாடுகிறார்கள் என்றும் கிராம மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
நமது தேசியப் பறவையாகவும், புராணத்தில் முருகப்பெருமானின் வாகனமாகவும் இருந்து வரும் மயிலுக்கு நிரந்தரமான வாழ்விடம் ஏற்படுத்த வேண்டும் என்பதால் இப்பகுதிகளில் மயில்கள் சரணாலயம் அமைக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது
வனத்துறையினர் இது குறித்து ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.