- முகப்பு
- மாவட்டச் செய்தி
- புவனகிரி அருகே மேல்வளையமா தேவி கிராமத்தில் இரண்டு குழந்தைகளின் தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.
புவனகிரி அருகே மேல்வளையமா தேவி கிராமத்தில் இரண்டு குழந்தைகளின் தாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.
சண்முகம்
UPDATED: Jun 25, 2024, 5:43:52 AM
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மேல் வளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி(34). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது.
இந்நிலையில் முத்துலெட்சுமியின் கணவர் சந்தோஷ்குமார் எந்த வேலைக்கும் செல்லாமல் குடிபோதையில் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் மன உளைச்சலும், வேதனையும் அடைந்த முத்துலட்சுமி வீட்டில் உள்ள மின்விசிறியின் கொக்கியில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இறந்த முத்துலட்சுமியின் குடும்பத்தினர் தங்களது பெண்ணின் இறப்பில் சந்தேகம் உள்ளது என கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமாகி மூன்றரை ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு