நானும் போலீஸ் தான் எனது கணவரை காப்பாற்றுங்கள் என கதறி அழுத பெண் காவலர்.

சண்முகம்

UPDATED: Jul 12, 2024, 11:25:11 AM

Latest Cuddalore News & Live Updates

சிதம்பரம் அருகே புவனகிரியை சேர்ந்தவர் தில்லை கணேஷ் அவரது மனைவி மருதூர் காவல் நிலையத்தில் காவலராக இந்துமதி என்பவர் பணியாற்றி வருகிறார் 

இவரது கணவர் உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மீண்டும் சொந்த ஊருக்கு ரயிலில் சிதம்பரம் நோக்கி வந்தபோது சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வருவதற்கு முன்பு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது,

News

 
அப்போது அதே ரயில் பெட்டியில் பயணம் செய்த ரயில்வே போலீசார் சுரேஷ் என்பவர் சிதம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்,
 

இதனை அடுத்து அவசர உறுதி 108 ஆம்புலன்ஸ் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டது, உடல் நலம் பாதிக்கப்பட்ட தில்லை கணேஷ் ரயிலில் இருந்து இறக்கி அவசர அவசரமாக அவசர உறுதி 108 ஆம்புலன்ஸ் மூலம் ரயில்வே போலீசார் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் அரசு மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று தற்போது நலமாக உள்ளார்,

Latest Cuddalore  District News

ரயில்வே போலீசாரின் உரிய நடவடிக்கையால் தற்போது அவர் உடல் நலம் சீராக உள்ளது என தெரிகிறது, ரயில்வே போலீசாரின் உரிய நடவடிக்கையால் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட பெண் காவலரின் கணவர் தற்போது நலமுடன் உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

 

VIDEOS

Recommended