- முகப்பு
- மாவட்டச் செய்தி
- புவனகிரியை சேர்ந்த இளம் பெண்ணுக்கு டெங்கு பாதிப்பு பல இடங்களிலும் தேங்கி நிற்கும் சாக்கடை, கழிவுநீர் மற்றும் மழைநீர்.
புவனகிரியை சேர்ந்த இளம் பெண்ணுக்கு டெங்கு பாதிப்பு பல இடங்களிலும் தேங்கி நிற்கும் சாக்கடை, கழிவுநீர் மற்றும் மழைநீர்.
சண்முகம்
UPDATED: May 18, 2024, 8:45:48 AM
கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மாவட்டத்தில் இதுவரை 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு கடலூர் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புவனகிரியில் இளம் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள டெங்கு பாதிப்பு குறித்து தெரிந்தும் பேரூராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் என்ற பெயரில் புவனகிரி மற்றும் சேத்தியாத்தோப்பு பேரூராட்சி நிர்வாகங்கள் எந்த முன்னெச்சரிக்கை பணிகளையும் செய்யாமல் இருப்பதாக பொதுமக்கள் வேதனையோடு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் புவனகிரி, சேத்தியாத்தோப்பு பேரூராட்சி பகுதிகளில் சாக்கடை கழிவு நீர் மற்றும் மழை நீர் போன்றவை மக்கள் நடமாட்டம் உள்ள சாலையோரம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி வடியாமல் நீண்ட நாட்களாக இருந்து வருகின்றன. அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகி வருவதையும் பார்க்க முடிகிறது.
ALSO READ | பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், 3 பேர் கைது.
இதுகுறித்து தெரிவித்துள்ள இப்பகுதி மக்கள் கூறும் போது தற்போது முதல் பாதிப்பு ஏற்பட்டதோடு இதுவே இறுதிப் பதிப்பாகவும் இருக்க வேண்டும்.
இனிமேலும் பாதிப்புகள் ஏற்படா வண்ணம் பேரூராட்சி நிர்வாகங்கள் தகுந்த முன்னெச்க்கை நடவடிக்கையை எடுத்து கழிவு நீர், சாக்கடை, மழை நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தகுந்த மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். இல்லையெனில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து உயிர் ஆபத்தில் கொண்டுபோய் விடவும் வாய்ப்பு இருக்கிறது.
எனவே இனியும் அலட்சியம் காட்டாமல் பேரூராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்குமா என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.