குவைத் தீ விபத்தில் உயிரிழந்த சின்னதுரை உடல் அடக்கம் செய்யப்பட்டது

சண்முகம்

UPDATED: Jun 15, 2024, 7:24:55 PM

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகில் உள்ள காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில் சின்னதுரை குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மரணம் அடைந்தார்.

சின்னதுரை சுமார் 15 ஆண்டுகளாக குவைத்தில் வேலை செய்துள்ளார் பின்பு தனது சர்வீஸ் பணம் முழுவதும் வாங்கிக் கொண்டு வந்து தனது சொந்த கிராமமான முட்டத்தில் புதியதாக வீடு கட்டி உள்ளார் பின்பு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அவர் திருமணம் செய்து உள்ளார்.

இவருக்கு குழந்தைகள் கிடையாது குவைத்தில் இருந்து மீண்டும் கிராமத்திற்கு வந்து ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை செய்துள்ளார் கிராமத்தில் இரண்டு ஏக்கர் புதியதாக நிலம் வாங்கியுள்ளார் பின்பு குவைத்தில் அவர் வேலை செய்த NBTC கம்பெனியிலிருந்து அழைப்பு வந்ததால் குவைத்து சென்று ஸ்டோர் கீப்பராக வேலை செய்துள்ளார்

தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு அவர் இரவு 11 மணி அளவில் தனது அறையில் வந்து தங்கி உள்ளார் விடியற்காலை 4 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்ட பொழுது புகைமண்டலத்திலிருந்து நான்காவது மாடியில் இருந்து குதித்துள்ளார்.

அவர் மேலே உள்ள கேபிள் வயரை பிடித்துக் கொண்டு குதித்த பொழுது கேபிள் வயர் அறுந்து விட்டது இதனால் அவர் படுகாயம் அடைந்து உடனடியாக பின்பு அவர் மரணம் அடைந்ததால் தமிழ்நாடு அரசாங்கத்தின் சார்பில் அவரது உடலை கொச்சின் விமான நிலையத்தில் வந்திறங்கியது

பின்பு அவரது சொந்த ஊரான காட்டுமன்னார்கோயில் முட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு நேற்று இரவு 12 முப்பது மணி அளவில் அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது பின்பு காலை கடலூர் மாவட்ட கலெக்டர் எஸ்பி தாசில்தார் மற்றும் அரசு அதிகாரிகள் உடலுக்கு மரியாதை செய்தனர் பின்பு அவரது உடல் தம்பரா பிள்ளை தோப்பில் உள்ள சுடுகாட்டில் புதைக்கப்பட்டது.

 

VIDEOS

Recommended