- முகப்பு
- மாவட்டச் செய்தி
- கள்ளக்குறிச்சி விசயத்தை அரசியலாக்க பார்க்கிறார்கள் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.
கள்ளக்குறிச்சி விசயத்தை அரசியலாக்க பார்க்கிறார்கள் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.
சுந்தர்
UPDATED: Jun 21, 2024, 8:29:04 PM
வசந்த் அண்ட் கோ வின் 118 வது கடை குன்றத்தூர் பகுதியில் இன்று புதிதாக திறக்கப்பட்டது டிவி பிரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் இந்த கடையை அதன் உரிமையாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 118 ஆவது புதிய கடையை ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றியும் திறந்து வைத்தார்.
இதையடுத்து கடையில் பணிபுரிபவர்களும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் பூங்கொத்து, சால்வை அணிவித்து அவரை வரவேற்றனர். 118 வது கடையின் திறப்பு விழாவை முன்னிட்டு கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளுடன் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது இதையடுத்து அவர் அளித்த பேட்டியில்
கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் மன வருத்தத்தை அளிக்கிறது இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்
மத்திய அரசு தங்களது வேலையை காட்ட ஆரம்பித்துள்ளது என்று சொல்ல முடியும் இன்னும் பதவி ஏற்று முடிக்கவில்லை இன்னும் பல இன்னல்களை கொடுப்பார்கள் அதை எதிர்கொள்வோம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்
நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கு துணையாகவும் மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிர்ப்பாக இருப்போம்
பாராளுமன்றத்தில் எங்களது எண்ணிக்கை குறைவாக இருந்தபோது அவர்களது ஆதிக்கம் அதிகமாக இருந்தது வலுவான எதிர்க்கட்சியாக உள்ளதால் எங்களது குரல் பலமாக ஒலிக்கும் கடந்த முறை போன்று நாடாளுமன்றத்திற்கு பிரதமர் வரவில்லை என்றால் கேள்வி எழுப்புவோம்
விக்கிரவாண்டி இடை தேர்தலில் அதிமுக புறக்கணித்தாலும் திமுக வேட்பாளர் மிக பெரிய வெற்றியை பெறுவார்
கள்ளக்குறிச்சி விஷயத்தை அனைவரும் அரசியலாக்க பார்க்கிறார்கள் கள்ளச்சாராயத்தை எப்படி தடுக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும், முதல்வர் கமிட்டி அமைத்துள்ளார் இதற்கான தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார்.