• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளின் கடையை அகற்றுவதை அடுத்து உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளின் கடையை அகற்றுவதை அடுத்து உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை

சுந்தர்

UPDATED: May 21, 2024, 1:51:20 PM

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பூந்தமல்லி பேருந்து நிலைய முகப்பு பகுதியில் பல ஆண்டு காலமாக 30க்கும் மேற்பட்டோர் பழ வியாபாரம் செய்து வருகின்றனர்.

பூந்தமல்லியில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி காரணமாக மேற்கொண்ட கடைகள் அகற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து செய்வதறியாத திகைத்த பழ வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு பூந்தமல்லி நகராட்சி சார்பில் பேருந்து நிலைய வளாகத்தில் மாற்று இடம் அமைத்து தர வேண்டும் எனவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் தங்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended