- முகப்பு
- மாவட்டச் செய்தி
- புவனகிரி அருகே குழந்தை திருமணம், மாப்பிள்ளை உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு
புவனகிரி அருகே குழந்தை திருமணம், மாப்பிள்ளை உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு
சண்முகம்
UPDATED: Jul 17, 2024, 9:28:01 AM
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஜெயங்கொண்டான் கிராமத்தில் உள்ள மதுரை வீரன் கோவிலில் 17 வயதுள்ள சிறுமி ஒருவருக்கும், வடகரை பகுதியைச் சேர்ந்த பிரபு(29), என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இந் நிலையில் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற புவனகிரி வட்டார மகளிர் ஊர் நல அலுவலர் பஞ்சவர்ணம் விசாரணை செய்ததில் குழந்தை திருமணம் நடைபெற உள்ளது உறுதியானது.
இந்நிலையில், இதுகுறித்து மருதூர் காவல் நிலையத்தில் குழந்தை நல அலுவலர் புகார் அளித்தார். புகாரின் பேரில் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய முயன்ற மாப்பிள்ளை
பிரபு (29), சிவகாமி,தியாகு, சங்கர், ஜெகதம் அவரது உறவினர்கள், குடும்பத்தினர் என ஐந்து பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு