- முகப்பு
- மாவட்டச் செய்தி
- ஜெயங்கொண்டம் அருகே உதயநத்தம் கிராமத்தில் அரசு பள்ளி உட்பட 5 நாட்களாக குடிதண்ணீர் இல்லாததால் காலி குடங்களுடன் சாலை மறியல்
ஜெயங்கொண்டம் அருகே உதயநத்தம் கிராமத்தில் அரசு பள்ளி உட்பட 5 நாட்களாக குடிதண்ணீர் இல்லாததால் காலி குடங்களுடன் சாலை மறியல்
வேல் முருகன்
UPDATED: Jun 27, 2024, 7:14:47 PM
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து உதயநத்தம் கிராமத்தில் சுமார் இரண்டு மாத காலமாக குடிதண்ணீர் வரவில்லை என்று பொதுமக்கள் தொடர்ந்து கூறி வந்தனர்
இந்நிலையில் தற்போது ஐந்து நாட்களாக சுத்தமாக தண்ணீர் வரவில்லை என்றும் உதயணத்தம் அரசு பள்ளியில் தமிழக அரசு அறிவித்துள்ள காலை உணவு திட்டம் உணவு சமைப்பதற்கு தண்ணீர் இல்லாமல் உணவு சமைக்க முடியாமல் இருப்பதாகவும்
இதனால் பள்ளி செல்லும் மாணவிகள் குடிதண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறி அந்தப் பகுதியில் உள்ள பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி இடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அந்த சாலையில் செல்லும் அரசு பேருந்து உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் நிற்கின்றன.
தகவல் அறிந்து வந்த தாப்பலூர் போலீசார் பொதுமக்களை சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களை கலந்து செல்ல கூறிய போது ஊராட்சி மன்ற தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் சம்மன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து குடிப் பிரச்சனை தீர்க்க நடவடிக்கை எடுப்பதற்காக கூறினால் மட்டுமே இந்த இடத்தை விட்டு நாங்கள் செல்வோம் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் நீண்ட நேரமாக பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.