கழிவு நீர் வடிகால் ஓடையில் தவறி விழுந்த பசு மாடு.

வேல்முருகன்

UPDATED: May 17, 2024, 2:20:47 PM

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் சாலை ஓரங்களில் அதிக அளவில் சுற்றி தெரியும் பசு மாடுகளால் அடிக்கடி வாகன விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் 3-வது குறுக்குத் தெருவில் சாலை ஓரத்தில் அமைந்துள்ள கழிவுநீர் வடிகால் ஓடையில் சினை பசு மாடு ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

அப்போது பசுமாட்டின் சத்தம் கேட்டு, அவ்வழியே சென்றவர்கள், உடனடியாக ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், 

கழிவுநீர் வடிகால் ஓடையில் சிக்கிய பசுமாட்டை நீண்ட போராட்டத்திற்கு பிறகு கயிறு மூலம் கட்டி பத்திரமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர்.

இதையடுத்து உயிருடன் மீட்ட பசுமாட்டை அதன் உரிமையாளரிடம், ஒப்படைத்து, பசுமாட்டை வளர்ப்பவர்கள் கண்காணித்து வளர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கி அனுப்பினர்.

இச்சம்பகத்தால் ஜெயங்கொண்டம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

  • 1

VIDEOS

Recommended