• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • அரசடி காடு பகுதி மக்களுக்கு பாதை வழங்க கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு

அரசடி காடு பகுதி மக்களுக்கு பாதை வழங்க கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு

மாரியப்பன்

UPDATED: Jun 19, 2024, 12:18:23 PM

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் பூலாம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட அரசடிக்காடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஜூன் - 18 ஆம் தேதி பகல் - 1 மணி அளவில் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில்,  

பூலாம்பாடியில் இருந்து அரசடி காடு செல்லும் ஏழு கிலோமீட்டர் சாலையை, பல ஆண்டுகளாகஅப்பகுதி மக்கள் பயன்படுத்திவந்த நிலையில் அப்பகுதியில் தனி நபர்களுக்கு சொந்தமான நிலங்கள் பாதைக்காக வழங்கப்பட்டது.

 

அதில் ஒருவர் மட்டும் சாலைக்கு வழிவிடாமல் தற்போது மரித்துள்ளதாகவும், அப்பகுதியில் உள்ள பலர் பாதைக்கு இடம் வழங்கிய நிலையில் இடம் வழங்குவதாக தெரிவித்த தனி நபர் தற்போது பேரூராட்சி துணைத்தலைவர் தூண்டுதல் இருப்பதால் பாதைக்கு வழி விடாமல் தடுத்துள்ளதாகவும்,

இதனால் , அந்த வழியாக வந்து சென்ற பள்ளி பேருந்துகள், பால் ஏற்றி செல்லும் வாகனங்கள் உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளதால், மிகவும் அப்பகுதி மக்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,

எனவே அப்பகுதி மக்கள் செல்ல பாதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், அதற்காக மாவட்ட காவல் அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு அளித்திருப்பதாக தெரிவித்துள்ளனர், இந்த மனு வழங்கும் நிகழ்ச்சியின் போது கொங்கு பேரவை சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

பேட்டி: இளையப்பன் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கொங்குநாடு பேரவை.

 

VIDEOS

Recommended