• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • இந்த மாதம் கொடுக்க வேண்டிய பாமாயிலை வருகின்ற மாதத்தில் சேர்த்து கொடுப்பதாக கூறி அதை கள்ள சந்தையில் விற்பனை பொதுமக்கள் புகார்.

இந்த மாதம் கொடுக்க வேண்டிய பாமாயிலை வருகின்ற மாதத்தில் சேர்த்து கொடுப்பதாக கூறி அதை கள்ள சந்தையில் விற்பனை பொதுமக்கள் புகார்.

லட்சுமி காந்த்

UPDATED: May 21, 2024, 7:26:17 PM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய 5 தாலுகாவில், 634 ரேஷன் கடைகள் உள்ளன.

இக்கடைகளில் உள்ள 4 லட்சத்து 3,817 ரேஷன் கார்டுகளுக்கு,. கார்டின் தன்மைக்கேற்ப சர்க்கரை, அரிசி, துவரம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய், கோதுமை உள்ளிட்ட அத்தியாசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள


அனைத்து ரேஷன் கடைகளிலும், கார்டுதாரர்களுக்கு மே மாதம் வழங்க வேண்டிய பாமாயில், துவரம் பருப்பு 21 நாள் கடந்தும் இதுவரை வழங்கவில்லை என, புகார் எழுந்துள்ளது. 

ரேஷன் கடைக்கு பாமாயில், துவரம் பருப்பு வாங்க தினந்தோறும் செல்லும் கார்டுதாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை சின்ன தெரு பகுதியை சேர்ந்தபள்ளி மாணவி கவிஸ்ரீ சீதாராமன் கூறும் போது, பள்ளிக்கூடம் தேர்வு விடுமுறை என்பதால் தினந்தோறும் ரேஷன் கடைக்கு நாங்கள் சென்று பாமாயில் ,துவரம் பருப்பு, கோதுமை வந்து வட்டதா? வந்து விட்டதா? என கேட்போம் .

விற்பனையாளர் இன்று வரும் நாளை வரும் என கூறிவிட்டு தற்போது அடுத்த மாதம் சேர்த்து தருகிறேன் என கூறுவது ஏற்புடையதாக இல்லை என என புலம்பினார்.

உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு 25 சதவீத பாமாயில் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது.

கார்டுதாரர்களுக்கு அதை வழங்கினால் பாமாயில் கிடைக்காத கார்டுதாரர்கள் வாக்குவாதம் செய்வார்கள் என நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் கூறுவதால் வந்த சரக்குகளை அப்படியே நிறுத்தி வைத்துள்ளோம்.

மேலும் துவரம் பருப்பு கொஞ்சம் கூட அனுப்பவில்லை, கோவில் விசேஷமான நாட்கள் என்பதால் மக்கள் அதிகமாக துவரம் பருப்பு வாங்குவார்கள் ,தமிழ்நாடு அரசாங்கம் அதை அனுப்பாததால் மக்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டது உண்மைதான் என உண்மையை ஒத்துக் கொண்டார்.

பொதுமக்களுக்கு வழங்கப்படும் பாமாயில் ,துவரம் பருப்பு போன்ற பொருட்களை இந்த முறை வழங்காமல் ஜூன் மாதத்தில் சேர்த்து வழங்குவதாக சில விற்பனையாளர்கள் கூறிவிட்டு தற்போது வந்துள்ள 25 % பாமாயிலை கள்ள சந்தையில் விற்க திட்டமிட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். 

பேட்டி 1. மேகலா குடும்பத்தலைவி 

பேட்டி 2. ஸ்ரீகவி சீதாராமன் பள்ளி மாணவி

 

VIDEOS

Recommended