ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு 2 கண்டைனர் லாரிகளில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்.

L.குமார்

UPDATED: Jul 25, 2024, 6:50:59 PM

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி

உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளின் அறிவுரையின் பேரில் போலீசார் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து கண்டெய்னர் லாரிகள் மூலம் குட்கா பொருட்கள் கடத்தி வரப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட காவல் நிர்வாகத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கும்மிடிப்பூண்டியில் உள்ள அனைத்து காவல் நிலைய ஒலிபெருக்கிகளிலும் திருவள்ளூர் மாவட்ட போலீசார் குட்கா கடத்தல் குறித்து தகவல் பரிமாற்றம் செய்தனர்.

குட்கா பொருட்கள்

அதன் அடிப்படையில் உஷாரான போலீசார் அனைத்து சாலை சந்திப்புகளிலும் வாகன சோதனையை துரிதப்படுத்தியுள்ளனர். 

அப்போது ஆரம்பாக்கம் போலீஸ் சோதனை சாவடியில் அதிவேகமாக வந்த மூன்று கண்டனர் லாரிகளை போலீசார் துரத்திப் பிடித்தனர்.

விசாரணையில் ஓட்டுநர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததன் பேரில் சிப்காட் காவல் நிலையம் கண்டெய்னர் விழாவை காவல் நிலையம் கொண்டு வந்து சோதனை மேற்கொண்ட போது இரண்டு கண்டெய்னர் லாரிகளில் சுமார் 800 அட்டைப்பெட்டிகளில் டன் கணக்கில் குட்கா பொருட்கள் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

Tamil Nadu Crime News 

மேலும் மூன்றாவதாக பிடிபட்ட கண்டெய்னர் லாரியை போலீசார் பூட்டை உடைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இதில் பின்பக்கமாக மருத்துவ பொருட்கள் உள்ள நிலையில் மேலும் கண்டனரில் உள்ள அனைத்து பெட்டிகளையும் சோதனை செய்த பின்னரே இதற்கான முழு விவரம் தெரியும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

அதேபோல் மூன்று கண்டனர் லாரி ஓட்டி வந்த ஓட்டுநர்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended