• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஐஓபி ஏடிஎம் மையத்தில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்து குபு குபுவென கரும்புகை வெளிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஐஓபி ஏடிஎம் மையத்தில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்து குபு குபுவென கரும்புகை வெளிவந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

லட்சுமி காந்த்

UPDATED: Jul 5, 2024, 3:54:00 AM

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் மேலாண்ட ராஜ வீதியில் ஐ.ஓ.பி. வங்கி இயங்கி வருகிறது. அந்த வங்கியையொட்டி ஏ.டி.எம்.மையம் உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்தின் உள் பகுதியில் வங்கிக்கு செல்லும் மின் இணைப்புக்கான மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்து கரும்புகை கிளம்பியது. பணம் இருக்கும் ஏ.டி.எம். மையத்தில் யாரேனும் தீ வைத்துவிட்டனரோ என்ற அச்சத்தில் பலரும் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

வங்கி ஊழியர் ஒருவர் வேகமாக வந்து தீயணைக்கும் கருவியை கொண்டு வந்து உள் பகுதியில் புகையை அடித்தார். இதனால் அந்த இடத்தில் மேலும் பெரும் புகை மூட்டம் ஏற்பட்டது.

பின்னர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து அந்தப் பகுதியில் ஆய்வு செய்தனர். மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்து கரும் புகை வந்தது தெரிய வந்தது. இந்தப் பிரச்சினையில் அந்தப் பகுதியில் மின் இணைப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட இந்த மின்கசிவு தீ விபத்தால் அந்தப் பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது . தீயணைப்புத் துறையினர் வந்து மீண்டும் தீ ஏற்படாத வண்ணம் மின் வயர்களை துண்டித்து கெமிக்கலை பீய்ச்சி அடித்தனர்.

நல்வாய்ப்பாக ஏடிஎம் எந்திரத்தில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை, ஏற்பட்டிருந்தால் பல லட்ச ரூபாய் பணம் சேதமடைந்த இருக்க கூடும் என தீயணைப்பு துறையினர் கூறினார்

இது தொடர்பாக வாலாஜாபாத் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended