- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பிரதமர் மோடி பதவியேற்றதற்கு கன்னியாகுமரி பிஜேபியினர் உற்சாக கொண்டாட்டம்
பிரதமர் மோடி பதவியேற்றதற்கு கன்னியாகுமரி பிஜேபியினர் உற்சாக கொண்டாட்டம்
முகேஷ்
UPDATED: Jun 10, 2024, 5:38:13 AM
நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 240 தொகுதிகளையும் கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து ஆட்சியையும் கைப்பற்றிய நிலையில்,தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது,
அதேபோன்று பாரத பிரதமராக மூன்றாவது முறையாகவும் நரேந்திர மோடி பதவி ஏற்றுள்ளார்,இதனை கொண்டாடும் விதமாக கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர். தர்மராஜ் தலைமையில் கட்சி கொடி ஏற்றி பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்,
அதே போன்று நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு பாஜக மாவட்ட பொருளாளரும், மாநகராட்சி மண்டல தலைவருமான. முத்துராமன் தலைமையில் வான வேடிக்கை வெடித்து பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்,
இதில் மாவட்ட துணைத் தலைவர் தேவ், மாநில செயலாளரும் முன்னாள் நகர் மன்ற தலைவியுமான மீனாதேவ் எம் சி, மற்றும் பாஜக பொருளாதாரப் பிரிவு தலைவரும்,மாநகராட்சி கவுன்சிலருமான ஐயப்பன் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு