- முகப்பு
- மாவட்டச் செய்தி
- 40 ஆண்டுகளாக குடியிருப்பு பகுதியில் இருந்த 30 டன் எடை கொண்ட அரசமரம் மீண்டும் உயிர் கொடுத்த பசுமை ஆர்வலர்கள்.
40 ஆண்டுகளாக குடியிருப்பு பகுதியில் இருந்த 30 டன் எடை கொண்ட அரசமரம் மீண்டும் உயிர் கொடுத்த பசுமை ஆர்வலர்கள்.
லட்சுமி காந்த்
UPDATED: May 15, 2024, 7:34:05 AM
District news
சமீப காலமாகவே பொதுமக்களின் பாதுகாப்பான வாகன போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சாலையில் இருந்த மரங்கள் நெடுஞ்சாலை துறையால் அகற்றப்பட்டு, நான்கு வழி , ஆறு வழி, எட்டு வழி சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இதனால் சாலையோர மரங்களின் நிழல்களில் பயணித்து வந்த பொதுமக்கள் தற்போது பெரிதும் கடும் கோடை வெயிலில் அவதிப்பட்டு வருவதும் , சாலை பணிகள் முடிந்த இடங்களில் நெடுஞ்சாலைத்துறையினர் ஏனோதானோவென மீண்டும் சாலையோரத்தில் மரங்களை நட்டு வருகின்றனர்.
District news Today
மேலும் இயற்கை சூழலை அதிகரிக்க அதிக அளவில் மரங்களை வளர்க்க வேண்டும் என்ற ஆவல் பள்ளி மாணவ மாணவி மத்தியில் எழுந்துள்ளது. அதேபோல மூத்த குடிமக்கள் உணர்த்தியதை இளைஞர்களும் தற்போது கடைப்பிடித்து பசுமை சூழ்நிலை பாதுகாக்க முயன்று வருகின்றனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் பல்லவன் நகர் குடியிருப்பு பகுதியில் நடந்த 45 ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான இடத்தில் அரசமரம் ஒன்று வளர்ந்து வந்தது. இது மூலம் அப்பகுதி பொதுமக்கள் நிழல் மற்றும் நல்ல காற்றை அனுபவித்து வந்தனர்.
இந் நிலையில் அந்த இடத்தின் உரிமையாளர் புதிதாக கட்டடம் கட்ட தீர்மானித்து அரச மரத்தை அகற்ற முயன்றார் .
ALSO READ | நடிகர்களைப் பின்பற்றாதீர்கள்: கே ராஜன் பேச்சு!
Online District news
இந்த செயலை அறிந்த கீழ்க்கதிர்பூர் பகுதியைச் சேர்ந்த மாநில விருது பெற்ற பசுமை ஆர்வலர் மேகநாதன் ,தனது குழுவினருடன் அப்பகுதிக்கு சென்று அந்த உரிமையாளரிடம் பேசி, மரத்தை வேருடன் பெயர்த்து வேறு இடத்திற்கு எடுத்துச் சென்று நடவு செய்து கொள்ள வேண்டுகோள் விடுத்ததை ஏற்ற வீட்டு உரிமையாளர் அதற்கான கால அவகாச அனுமதியும் அளித்தார் .
அந்த அரசமரம் ஜேசிபி மற்றும் இரண்டு கிரேன் உதவியுடன் வேருடன் எடுக்கப்பட்டு லாரியில் ஏற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து பசுமை ஆர்வலர்கள், மின்வாரிய அலுவலர்கள், குடியிருப்பு வாசிகள் என அனைவரும் ஒருங்கிணைந்து அதனை காஞ்சிபுரம் கீழ்க்கதிப்பூர் அருகே நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு அதனை வெற்றிகரமாக நிறைவேற்றினர்.
District news and updates
வழிநெடுகிலும் இருந்த மின் ஒயர்களை எந்தவித சேதமும் இன்றி அனைவரின் ஒத்துழைப்புடன் எடுத்து சென்றததை பார்க்கும்போது மரத்திற்க்கும் மரியாதை செலுத்த வேண்டும்.அதற்க்கும் உயிர் உள்ளது என பொதுமக்கள் பேசிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.