• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஆட்சியில் எம்பி நிதிலிருந்து அவசர கதியில் கட்டப்பட்ட பயணியர் நிழற்கூடம் திறப்பு விழா கண்ட 3 மாதத்திலேயே சேதமானது.

ஆட்சியில் எம்பி நிதிலிருந்து அவசர கதியில் கட்டப்பட்ட பயணியர் நிழற்கூடம் திறப்பு விழா கண்ட 3 மாதத்திலேயே சேதமானது.

லட்சுமி காந்த்

UPDATED: May 15, 2024, 7:37:12 AM

Kancheepuram District news

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரங்கசாமிகுளம் பகுதியில் செங்கல்பட்டு, வாலாஜாபாத் , தாம்பரம் செல்லும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்காக கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி பேருந்து நிலைய நிழற்கூடம் அமைக்கப்பட்டது.

பயணிகளுக்கு தேவையான மொபைல் சார்ஜர் வசதி , மின்விசிறி மற்றும் கிரானைட் கற்களால் ஆன இருக்கைகள் என அனைத்து வசதிகளுடன் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் செல்வம் 2023 - 2024 தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 30 இலட்சம் செலவில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக அவசரகதியில் தரமற்ற முறையில் கட்டப்பட்டு வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

Today Kancheepuram News

இந் நிலையில் பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே பயணியர் நிழற்கூடத்தினை உத்திரமேரூர் எம்எல்ஏ கே.சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி எழிலரசன் ஆகியோரால் கடந்த பிப்ரவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதமே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட இந்த நிகழ்கூடம் திறக்கப்பட்டு மூன்று மாதங்கள் கூட ஆகாத நிலையில் பேருந்து நிறுத்தத்தில் உள்ள மேற்கூரை பூச்சு ஒரு பகுதி திடீரென பெயர்ந்து விழுந்தது. 

District news

இதனால் அங்கு பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.இதனையெடுத்து அங்கிருந்த சிமெண்ட் பூச்சிகளை பயணிகளே அப்புறப்படுத்தியிருக்கின்றனர்.

இந்த நிலையில் அந்தப் பயணியர் நிழல் கூட்டத்தில் பயணிகள் பலரும் அச்சப்பட்டு கொண்டு அங்கே அமராமல் நிழற்கூடத்திற்க்கு வெளியே கால் கடக்க காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Today District news

ஏற்கனவே கடந்த வாரம் அந்த நிழல் கூடத்தின் கூரையின் ஒரு பகுதியானது இதேபோன்று விழுந்து மீண்டும் அது சரிசெய்யப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு பகுதி விழுந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தரமற்ற முறையில் கட்டப்பட்டிருக்கும் இந்த நிழற்கூடத்தினை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து அதன் உறுதி தன்மையை உடனே கவனிக்க வேண்டும் அதன் பிறகே, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Online District news

மேலும் தற்போது வரை அந்த‌ நிழற்கூடத்தில் மின் இணைப்பு வழங்கப்படாமலும் உள்ளதால், மின்விசிறிகள் இருந்தும் பெயர் அளவிலே அனைத்து வசதிகளுடன் கூடிய நிழற்கூடம் என விடியாத திமுக அரசு மார்தட்டிக் கொள்வது எந்த விதத்தில் நியாயம் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 

VIDEOS

Recommended