• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் பிரத்தியேகமாக உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவு தயார் நிலையில் உள்ளது,

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் பிரத்தியேகமாக உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவு தயார் நிலையில் உள்ளது,

கோபி பிரசாந்த்

UPDATED: May 6, 2024, 6:00:27 PM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோடை வெப்ப பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் பிரத்தியேகமாக உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது.

வெயிலின் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் வெயில் தாக்கத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பிரத்தியேக சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் வெயிலினால் ஏதேனும் பாதிக்கப்பட்டால் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவில் சேர்ந்து உரிய சிகிச்சை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஷர்வன்குமார் அறிவித்துள்ளார்.

 

VIDEOS

Recommended