• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பல உயிர்களை பலி வாங்கிய கொடூர விஷ சாராய விற்பனைக்கு மறைமுக ஆதரவு அளித்த காவல்துறை கருப்பு ஆடுகள் மீது தமிழக அரசு இரும்புக் கொண்டு ஒடுக்குமா ?

பல உயிர்களை பலி வாங்கிய கொடூர விஷ சாராய விற்பனைக்கு மறைமுக ஆதரவு அளித்த காவல்துறை கருப்பு ஆடுகள் மீது தமிழக அரசு இரும்புக் கொண்டு ஒடுக்குமா ?

கார்மேகம்

UPDATED: Jun 23, 2024, 7:11:29 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த விஷ சாராய சாவுகள் அனைவரையும் கலங்கடித்து விட்டது இந்த மாவட்டத்துக்கு அருகிலுள்ள கல்வராயன் மலையில் குடிசைத் தொழிலாக யாருக்கும் தெரியாமல் சாராயம் காய்ச்சப்பட்டு அங்கிருந்து கள்ளக்குறிச்சியில் மற்ற பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டு டீ காபி விற்பது போல பல இடங்களில் விற்கப்பட்டதாக இப்போதுதான் தகவல் வெளியாகிறது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் இத்தகைய விஷ சாரயத்தைக் குடித்த 50 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

மேலும் 86 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிகப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இதில் முதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தம்பி இருவருக்கும் இந்த சாராயத்தை குடித்தவுடன் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்துவிட்டனர்

இதைத்தவிர மேலும் 9 பேர் வாந்தி மயக்கம் கண்பார்வை மங்குதல் போன்ற காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் அந்த பகுதியிலுள்ள சமூக ஆர்வலர்கள் இது விஷ சாராயத்தினால் ஏற்பட்ட சாவு என்று செய்திகளைப் பரப்பினர்

ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் விஷ சாராய சாவு அல்ல என்று மறுத்தார் இதனால் மற்றவர்களுக்கு இது ஒரு தெம்பைக் கொடுத்ததால் ஏற்கனவே விஷ சாராயம் குடித்து பலியானவர்கள் வீட்டுக்கு துக்கம் கேட்க சென்றவர்களும் அதனை வாங்கிக் குடித்து அடுத்த சில நிமிடங்களில் கொத்து கொத்தாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் உயிரிழப்புகளும் தொடர்ந்தன

இந்த சாராயத்தை விற்ற வியாபாரிகள் அதோடு போதைக்காக புதுச்சேரியில் இருந்து மெத்தனாலை வாங்கிவந்து அதில் சேர்த்து விஷ சாராமாக்கியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது

அதில் வேடிக்கை என்னவென்றால் நகராட்சி பகுதியில் போலீஸ் நிலையம் அருகிலேயே வெளிப்படையாக விற்பனை நடந்துள்ளது 

இந்த விஷ சாராய விற்பனையில் காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகள் ஆதரவினால் இவ்வளவு வெளிப்படையாக விற்பனை நடந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து குடிக்கும் போது போலீசார் கண்ணுக்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது ? என்பதன் பின்னனி என்ன அந்த பின்னணியில் காவல் கருப்பு ஆடுகள் ஒளிந்துள்ளன என்பது சந்தேகமின்றி தெரியவில்லையா என்பது தான் எல்லோருடைய கேள்வியாக உள்ளது.

இது போன்ற விஷ சாராய சாவுகள் தொடராமல் இருக்க காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் காவல் துறையை சீர்படுத்துவாரா ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

VIDEOS

Recommended