- முகப்பு
- மாவட்டச் செய்தி
- நடுக்கத்தில் பயணிகள் விபத்துகள் அதிகரிப்பதால் வாகன ஓட்டிகள் கவலை.
நடுக்கத்தில் பயணிகள் விபத்துகள் அதிகரிப்பதால் வாகன ஓட்டிகள் கவலை.
கோபி பிரசாந்த்
UPDATED: Jun 12, 2024, 1:40:15 PM
கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் கோமுகி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக கடந்த சில நாட்களில் இந்த பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதத்தில் தொடங்கப்பட்டு செப்டம்பரில் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், ஓராண்டு கடந்தும் முழுமையாக துவங்காமல் இழுபறி நிலையில் உள்ளது.
பைபாஸ் நான்கு வழிச்சாலையில் விபத்துகளைத் தவிர்க்க உருவாக்கப்பட்ட இந்த திட்டம், கோமுகி ஆற்றின் மேம்பாலம் கட்டும் பணிகள் மந்தமாக நடப்பதால் இன்னும் முழுமையடையாத நிலையில் உள்ளது.
இதனால் விபத்துக்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன. எனவே, மேம்பால கட்டும் பணிகளை துரிதப்படுத்தி விரைவில் முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ALSO READ | பி எஸ் எப் வீரரை கத்தியால் குத்தி கொலை.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு