பாம்பன்  பாலத்தில் வாகனங்களை நிருந்தி இறங்கினால் ரூ 1000 அபராதமா ?

கார்மேகம்

UPDATED: Apr 28, 2024, 1:52:38 PM

பாம்பன்  பாலத்தில் வாகனங்களை நிருந்தி இறங்கினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என வலைத்தளங்களில் பரவி குழப்பம் ஏற்படுத்தும் தகவலுக்கு  போலீஸ் துணை சூப்பிரண்டு விளக்கம்  அளித்துள்ளார்:

மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரம் தீவை இணைப்பதில்‌ கடல் நடுவே அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது

ராமேஸ்வரத்திற்கு தினமும் அரசு பஸ்கள் வாகனங்கள் தவிர சுற்றுலா வாகனங்களும் ஏராளமாக வருகின்றன.

சுற்றுலா வாகனங்களில் வருகிறவர்கள் பாம்பன் ரோடு மற்றும் ரெயில் பாலங்களை பார்க்கும் ஆர்வத்தில் வாகனங்களை ரோடு பாலத்தில் நிறுத்திவிட்டு வாகனங்களை விட்டு இறங்கி பாலத்தை பார்த்துச் செல்கின்றனர் 

இதனால் அடிக்கடி பாம்பன் ரோடு பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது சாலையை கடக்கும் சுற்றுலா பயணிகள் மீது வாகனங்கள் மோதி விபத்துக்களும் நடக்கின்றன

எனவே பாம்பன் பாலத்தில் விபத்தை தடுக்கவும் போக்குவரத்து நெருக்கடியை தடுக்கவும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும்

பாலத்தின் நுழைவுப் பகுதி மற்றும் மையப்பகுதியில் போலீசார் மூலம் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன இந்த நிலையில் பாம்பன் பாலத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு இறங்கினால் ரூ.1000 அபராதம் வீடு தேடி  வரும் என்ற தகவல் வாட்ஸ்- அப்‌ பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில்‌ வலம் வருகிறது.

இந்த தகவல் உண்மைதானா என சுற்றுலா பயணிகள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது 

இது குறித்து ராமேஸ்வரம் துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது :

பாம்பன் ரோடு பாலத்தில் வாகனங்களை நிறுத்தி கதவை திறந்து இறங்கினாலே ரு.1000 அபராதம் விதிக்கப்படும் என்ற தகவல் தவரானது

முக்கிய சுற்றுலா தலமாக இருப்பதால்  பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை தடுக்க பாலத்தில் வாகனங்களை திருத்த வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப் பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இதன் காரணமாகவே பாலத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி  கண்காணிக்கிறோம்

பாம்பன் பாலத்தில் போக்குவரத்து நெருக்கடியை தடுப்பதற்கு சுற்றுலா‌ பயணிகளும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் பாலத்தின் மையப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்

பாலத்தை பார்க்க விரும்பும் சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை பாலத்தின் நுழைவுப்பகுதியிலேயே நிறுத்தி அங்கிருந்து நடந்து சென்று பாலத்தை பார்த்த பின் மீண்டும் வாகனங்கள் நிறுத்திய இடத்துக்கு நடந்து சென்று‌ ஏறிச் செல்ல வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

 

VIDEOS

Recommended