திருப்புல்லாணி கோவிலில் ரூ.1 கோடி நகைகள்‌ மாயம் விவகாரத்தில் ஊழியரிடம் தீவிர விசாரணை.

கார்மேகம்

UPDATED: Jun 19, 2024, 12:30:45 PM

திருப்புல்லாணி கோவிலில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மாயமான சம்பவத்தில் கோவில் ஊழியரிடம் போலீஸ் சார் தீவிர விசாரணை நடத்தினார்கள் 

இராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப் பெருமாள் கோவிலில் பெருமாள் மற்றும் பத்மாஷனிதாயார் ஆகியோருக்கு அணிவிப்பதற்காக உள்ள மொத்த நகைகளில் 952 கிராம் எடை உள்ள 30 தங்க நகைகள் 1.199 கிராம் எடையுள்ள 16 வெள்ளி நகைகளும் என ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மாயமானது.

இது தொடர்பாக திவான் பழனிவேல் பாண்டியன் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சார் மேற்கண்ட நகை பொறுப்பாளர் ஆலய ஸ்தானிகர் சீனிவாச அய்யங்கார் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

ஸ்தானிகரிடமும்‌ அந்த காலகட்டத்தில் பணியாற்றிய பணியாளர்கள் ராமு பாண்டி சாமித்துரை முன்னால் திவான் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த மோசடி வழக்கு தொடர்பாக ஸ்தானிகர் சீனிவாச அய்யாகார் ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் 

மதுரை ஐகோர்ட்டில் இடைக்கால முன்ஜாமின் வழங்கி வரும் 17- ந் தேதி வழக்கினை விசாரித்து அறிக்கை அளிக்குமாறு ம் கூறி உள்ளார்.

இதன்படி ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சார் மேற்கண்ட நகைகள் மோசடி தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்

இதற்காக நேற்று சீனிவாச அய்யங்கார் ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் போலீஸ் சார் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜரானார் என்பது குறிப்பிட தக்கது. 

 

VIDEOS

Recommended