- முகப்பு
- மாவட்டச் செய்தி
- இந்திய ராணுவத்துக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் நடுவானில் கோளாறு.
இந்திய ராணுவத்துக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் நடுவானில் கோளாறு.
லட்சுமி காந்த்
UPDATED: Jul 31, 2024, 7:19:32 PM
காஞ்சிபுரம் மாவட்டம்
சாலவாக்கம் பகுதியில் திருவந்தார் அருகே உள்ள சாய்பாபா கோவில் பகுதியில் உள்ள நாலு ஏக்கர் காலி இடத்தில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஒரு ஹெலிகாப்டர் திடிரென கீழே இறங்கியது.
அதைக் கண்டு அச்சமுற்ற அப்பகுதிவாசிகள் ஓடி சென்று என்ன ஏது என கவனித்தபோது அந்த பயிற்சி ஹெலிகாப்டர் தாம்பரம் ராணுவ தளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டது என்றும், அதில் ஒரு பைலட் மற்றொரு பயிற்சி பைலட் வந்ததாகவும், அவர்களுக்கு எந்த விதமான காயமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
இந்திய ராணுவ ஹெலிகாப்டர்
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சாலவாக்கம் காவல் துறையினர் விசாரித்த போது பழுதடைந்த ஹெலிகாப்டரை சீர்படுத்த தாம்பரத்திலிருந்து மற்றொரு ஹெலிகாப்டர் வந்துள்ளதாகவும் அதில் இரண்டு பைலட், மூன்று தொழில்நுட்ப வல்லுனர்கள் வந்து பழுதடைந்த ஹெலிகாப்டரை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
சாலவாக்கம் பகுதியில் வயல்வெளியில் இறக்கப்பட்ட ஹெலிகாப்டரால் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு