- முகப்பு
- மாவட்டச் செய்தி
- இந்தியா, இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து 16,ம் தேதி திட்டமிட்டபடி நாகையில் இருந்து துவக்கம்.
இந்தியா, இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து 16,ம் தேதி திட்டமிட்டபடி நாகையில் இருந்து துவக்கம்.
செ.சீனிவாசன்
UPDATED: Aug 14, 2024, 4:07:31 AM
நாகப்பட்டினம் மாவட்டம்
இந்திய-இலங்கை இருநாட்டு நல்லுறவு, வர்த்தகம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக, நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பன்னாட்டு பயணியர் போக்குவரத்து சேவை துவங்க ஒப்பந்தமானது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு கடல் வழி பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை என்பது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14 ம் தேதி காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். புயல் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணம் காட்டி, சேவை தொடங்கிய சில நாட்களிலேயே அது நிறுத்தப்பட்டது.
இந்தியா, இலங்கை இடையேயான பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து
இந்நிலையில் இலங்கைக்கு மீண்டும் பன்னாட்டு பயணியர் படகு போக்குவரத்து சேவை தொடங்க இருப்பதால், அந்தமானில் இருந்து சிவகங்கை படகு, கடந்த வாரம் நாகை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அதைத்தொடர்ந்து இலங்கைக்கு படகு சோதனை ஓட்டம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் வரும் 16 ம் தேதி முதல் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு திட்டமிட்டபடி படகு போக்குவரத்து சேவை தொடங்க இருப்பதாக தனியார் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
16, ம் தேதி இமிகிரேஷன் நடைமுறைகளுக்குப் பின் முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிக்கொண்டு, நாகையிலிருந்து காலை 10 மணிக்கு கடல் வழியாக புறப்படும் பயணியர் படகானது, நான்கு மணி நேர பயணத்திற்கு பின் நண்பகல் 2 மணிக்கு காங்கேஷன்துறைக்கு சென்றடைகிறது.
காங்கேஷன்துறை
பின்னர் 17, ம் தேதி அங்கிருந்து 10, மணிக்கு புறப்பட்டு மதியம் 2,மணிக்கு மறு மார்க்கமாக நாகை வந்தடைகிறது.
அதனைத் தொடர்ந்து 18ஆம் தேதி வழக்கம்போல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் நாகையிலிருந்து காலை 8 மணிக்கு புறப்படும் பயணியர் படகானது, நண்பகல் 12 மணிக்கு காங்கேஷன்துறைக்கு சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து 2, மணிக்கு புறப்பட்டு மாலை 6,மணிக்கு மறு மார்க்கமாக நாகை வந்தடைகிறது.
இந்த படகில் கீழ்தளத்தில் உள்ள இருக்கைகளில் ஒருவர் பயணிக்க 5000 ரூபாயும், மேல் தளத்தில் உள்ள சிறப்பு வகுப்பில் பயணிக்க 7500 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடல் வழி பயணம்
கடல் வழி பயணம் மேற்கொள்ளும் பயணி ஒருவர் 25 கிலோ லக்கேஜ் மட்டுமே எடுத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், படகில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு தேவையான சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் துரித உணவுகள், டீ காபி, கூல்ட்ரிங்ஸ் உள்ளிட்டவை வழங்க அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ள படகை இயக்கும் நிறுவனம், சொகுசு மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு இந்த படகு பெட்டர் சாய்ஸ் என பெருமிதம் தெரிவித்தனர்.
மேலும் நாகை காங்கேசன் துறை இடையே மீண்டும் தொடங்கப்படும் பன்னாட்டு பயணியர் பயணத்தால், இந்திய இலங்கை இரு நாட்டு மக்களின், கடல் வாணிபம் மேம்படும் என்ற நம்பிக்கை தங்களுக்கு எழுந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.