இட்டால் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை 

லட்சுமி காந்த்

UPDATED: Nov 19, 2024, 10:17:12 AM

காஞ்சிபுரம் மாவட்டம்

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

இட்டால் பிளாஸ்டிக் காம்பவுண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மூலம் சுப்ரீம் டிப்ரஸ்டு சென்டர் & கட்டிங் வீல்கள் தயாரிக்கப்படுகின்றன.

இது சுவிட்சர்லாந்தின் இணை நிறுவனம். ஜெர்மனி, யுகே, ஸ்வீடன், போலந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள துணை நிறுவனங்களுடன் கூடிய Exitflex கார்பைடு கட்டிங் டிப்ஸ் மற்றும் ஸ்ப்ரே முனைகள் தயாரிப்பதில் உலகளாவிய சந்தையில் இந்த நிறுவனம் முன்னணியில் உள்ளது.

இட்டால் இந்தியா பிரைவேட் லிமிடெட்

உயர் அழுத்த ரப்பர் மற்றும் தெர்மோபிளாஸ்டிக் குழல்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பாலிஹோஸ் குழும நிறுவனங்களுடனும் இந்த‌ நிறுவனம் இணைப்பில் உள்ளது.

இந்த நிறுவனத்தில் முறையாக வருமான வரி தாக்கல் செய்யப்படவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இருங்காட்டுகோட்டை தொழிற்சாலைகளில் வருமான வரி துறையினரின் சோதனை இன்று காலை 10 மணியில் இருந்து சுமார் மூன்று மணி நேரமாக நடைபெற்று வருகிறது.

வருமான வரித்துறையினர் சோதனை

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு 7 வாகனங்களில் வந்துள்ள வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் குழுவினர் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருங்காட்டுகோட்டையில் உள்ள நிறுவனங்களில் பாலிஹோஸ், மற்றும் இட்டால் ஆகிய இரண்டு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சுமார் 4 மணி நேரமாக சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended