- முகப்பு
- மாவட்டச் செய்தி
- நாகை இறையான்குடி கிராமத்தில் சாலையின் குறுக்கே மற்றும் விளைநிலங்களின் நடுவே தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் மக்கள் உயிருக்கு ஆபத்து.
நாகை இறையான்குடி கிராமத்தில் சாலையின் குறுக்கே மற்றும் விளைநிலங்களின் நடுவே தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் மக்கள் உயிருக்கு ஆபத்து.
சீனிவாசன்
UPDATED: Apr 23, 2024, 7:19:02 AM
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட இறையான்குடி ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்
இந்த நிலையில் இறையான்குடி பாலக்குறிச்சி சாலையில் இருந்து கிழக்கு காலனி தெருவிற்கு செல்லும் சாலையில் உள்ள மின் கம்பங்களின் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது நடந்து செல்பவர்களின் கைகளை உயர்த்தினால் கைகளில் இருந்து ஒரு அடி உயரம் மட்டுமே மின் தம்பிக்கு இடைவெளி உள்ளது.
அதைப்போல் அருகில் உள்ள விளைநிலங்கள் வழியாக செல்லும் உயர் மின்னழுத்த மின் கம்பிகளும் மிகவும் தாழ்வாக செல்கிறது
இதனால் உழவுப் பணியின் போது டிராக்டர் மேல் பகுதியில் மின்கம்பி உரசும் நிலை ஏற்பட்டுள்ளதால் விளைநிலங்களை குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் பணியாட்கள் கொண்டு உழவுப் பணி மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமின்றி மின் கம்பங்களும் சேதமடைந்து உள்ளதால் எப்போது விழும் என்ற அச்சத்திலே பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உள்ளன
இது குறித்து கிராம மக்கள் பலமுறை மனு அளித்தும் போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் உயிர் சேதம் ஏற்படுவதற்குள் விரைவாக தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தியும் பாதுகாப்பற்ற மின்கம்பங்களை சீரமைத்து வழங்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
மின்சாரத் துறையினரின் அலட்சியத்தால் மக்கள் படும் துன்பம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது.