- முகப்பு
- மாவட்டச் செய்தி
- திருப்பாச்சூர் ஊராட்சியில் வருடகணக்கில் சுத்தம் செய்யப்படாத குடிநீர் நீர்த்தேக்க தொட்டி நோய் தொற்று பரவும் அபாயம்.
திருப்பாச்சூர் ஊராட்சியில் வருடகணக்கில் சுத்தம் செய்யப்படாத குடிநீர் நீர்த்தேக்க தொட்டி நோய் தொற்று பரவும் அபாயம்.
ராஜ்குமார்
UPDATED: Aug 2, 2024, 8:07:21 AM
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி
ஒன்றியத்திற்கு உட்பட்டது திருப்பாச்சூர் ஊராட்சி இதில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சோபன்பாபு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அரசு நிதியை கையாடல் செய்ததாக எழுந்த புகார் அடிப்படையில் அவரது நிதி கையாளும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஊராட்சியில் 16க்கும் மேற்பட்ட குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது
இந்த குடிநீரை தான் மக்கள் தினந்தோறும் குடிநீராகவும் சமைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
Latest Thiruvallur News & Live
இந்த குடிநீர் தொட்டிகளை பிரதி மாதம் 5ஆம் தேதி மற்றும் 20ஆம் தேதி என்று ஒவ்வொரு மாதமும் 15 நாளுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட வேண்டும் என்பது விதி ஆனால் இந்த குடிநீர் தொட்டிகள் சரிவர பராமரிப்பு இல்லாமல் வருட கணக்கில் சுத்தம் செய்யப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது
இதனால் குடிநீரில் பூச்சிகள் மரத்தின் வேர்கள் மணல் போன்றவை குடிநீருடன் கலந்து வருவதால் ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு அவ்வப்போது உடல் நலக்குறைவு ஏற்படுவதாகவும் இந்த நிலை நீடித்தால் பெரிய அளவில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக குறிப்பிடுகிறது
Latest Thiruvallur District News
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் எந்த ஒரு நடவடிக்கும் எடுக்காத நிலையில் வீடு வீடாக சென்று குடிநீர் சுத்தமாக உள்ளதா? மழை நீர் தேங்கியுள்ளதா என ஆய்வு நடத்தும் சுகாதாரத்துறை பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்யாதது ஏன்
இனியாவது ஆய்வு செய்யப்படுமா குடியில் தொட்டிகள் சுத்தமாக பராமரிக்கப்படுமா இது தெரிந்தும் குடியரசு தொட்டியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்காத வட்டார வளர்ச்சி அலுவலர் மண்டல துணை அலுவலர் ஊராட்சி செயலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது மாவட்ட ஆட்சியருக்கே வெளிச்சம்