• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • போளூரில் போக்குவரத்து இடையூறுகளை தவிர்க்க புறவழிச்சாலை 3 கி.மீ. தூரம் அமைக்கப்படும் சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு.

போளூரில் போக்குவரத்து இடையூறுகளை தவிர்க்க புறவழிச்சாலை 3 கி.மீ. தூரம் அமைக்கப்படும் சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு.

அஜித் குமார்

UPDATED: Jun 30, 2024, 4:14:57 AM

பேரவையில் கேள்வி நேரத் தின்போது கலசப்பாக் கம் எம்எல்ஏ சரவணன் (திமுக) பேசுகையில்,கல சப்பாக்கம் தொகுதிக்குட் பட்ட ஜவ்வாது மலைக்குச் செல்ல வேண்டுமென் றால், போளூர் மையப்ப குதியான பஜார் வழியா கத்தான் செல்ல முடியும்.

அங்கு எதிரில் அதிக அளவிலான கிராமங்கள் இருப்பதால் கரும்பு லோடு வாகனம் போன்று போக் குவரத்து நெரிசல் காரண மாக கால விரயம் ஏற்ப டுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, போளூர் வழி யாக ஜவ்வாது மலைக்கு ஒரு புறவழிச்சாலை அமைத்துத் தரப்படுமா' என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் எ.வ. வேலு பேசுகையில், 'ஜவ்வாது மலை என்பது அதைப் பற்றி அவை முன்னவரும் 

நானும் நன்கு அறிந்தவர் கள். ஏறத்தாழ, 260-க்கு மேற்பட்ட கிராமங்கள் அந்த மலையில் இருக் கின்றன. அந்த மலைக்குப் போகவேண்டுமானால், போளூர் நகரப் பகுதிக ளின் உள்வழியாகத்தான் போக முடியும். போளூர் நகர்ப் பகுதி வழியாகத் தான் செல்ல வேண்டும். போளூர் நகர்ப் பகு தியில் உள்ள சாலைகள் போக்குவரத்து  நெரிசலாக இருக்கிற காரணத்தினால், போக்குவரத்து இடையூறுகள் இருக்கிறது என்பதை திமுக ஆட்சியிலே தலை வர் அறிந்த காரணத்தினா லேதான், சென்ற ஆண்டே இந்தப் பணிகள் அரசின் சார்பாக எடுத்துக்கொள் ளப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, ஏறத்தாழ இந்தப் புறவ ழிச்சாலை 3 கி.மீ. தூரம் வரை போட வேண்டும்.

ஆகவே அரசு முடிவு செய் யப்பட்டு, அதற்கான திட் டத்தை அறிவிக்க தயார் செய்வதற்காக 11 லட்சம் ரூபாய் பணம் ஒதுக்கப் பட்டு, திட்ட அறிக்கை கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

அதுமுடிந்த உடனே புறவ ழிச் சாலை அமைப்பதற் காக முதல்வரின் அனுமதி யோடு நிதி ஒதுக்கப்பட்டு, இந்த நிதியாண்டிலே முடிந்த வரை அந்தப் பணிகள் முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள் ளப்படும்' என்றார்.

 

VIDEOS

Recommended