- முகப்பு
- மாவட்டச் செய்தி
- மாற்றம் மாற்றம் என்று பேசிக்கொணடிருந்தால் போதாது ஒவ்வொரு ஊரில் உள்ள மக்களின் கண்ணீரை துடைத்து பசியை போக்க வேண்டும் - நடிகர் ராகவாலாரன்ஸ்
மாற்றம் மாற்றம் என்று பேசிக்கொணடிருந்தால் போதாது ஒவ்வொரு ஊரில் உள்ள மக்களின் கண்ணீரை துடைத்து பசியை போக்க வேண்டும் - நடிகர் ராகவாலாரன்ஸ்
JK
UPDATED: May 9, 2024, 11:23:57 AM
திரைப்பட நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றம் பவுண்டேஷன் என்ற பெயரில் தமிழக முழுவதும் உள்ள ஏழை எளிய விவசாயிகளுக்கு இலவச டிராக்டர் வழங்கும் சேவையை செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள திருமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் விவசாயி மாரியப்பன் என்ற இளைஞருக்கு நடிகர் லாரன்ஸ் டிராக்டர் வழங்குவதற்காக வந்திருந்தார்.
அவருக்கு கிராம மக்கள் மேல் தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கிராம மக்கள் அவரவர் குழந்தைகளை நடிகர் லாரன்ஸ் கையில் கொடுத்து தங்களது செல்போனில் போட்டோ எடுத்துக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து விவசாயி மாரியப்பனிடம் டிராக்டர் சாவியை கொடுத்த நடிகர் லாரன்ஸ் இந்த டிராக்டரை யாரிடமும் காசு வாங்கிக்கொண்டு இதை தரவில்லை.
இரவு பகல் பாராமல் உழைத்து அந்த பணத்தில் இதை நான் செய்கிறேன். இந்த டிராக்டரை உங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஊர் மக்கள் யாரெல்லாம் விவசாயம் செய்ய கேட்கிறார்களோ அவர்களுக்கும் இலவசமாக கொடுங்கள் என விவசாயி மாரியப்பனிடம் அறிவுறுத்தினார்.
மேலும் மாற்றம், மாற்றம் என்று பேசிக்கொண்டே இருந்தால் போதாது ஒவ்வொரு ஊருக்கும் செல்ல வேண்டும் ஒவ்வொருவரின் கண்ணீரையும் துடைக்க வேண்டும்.
ஒவ்வொருவரின் பசியை தீர்க்க வேண்டும். அவர்கள் சம்பாதிக்கும் வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பேசினார்.
இதனைத்தொடர்ந்து கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடிகர் ராகவா லாரன்சுக்கு பாசமாக சோறு ஊட்டிவிட்டு மகிழ்ந்தனர்.