"புனித ஆத்மாக்கள் தினம்".

JK

UPDATED: Nov 2, 2024, 10:41:34 AM

திருச்சி

திருச்சி கல்லறையில் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு

கிறித்தவ கத்தோலிக்க சபையினர் இறந்தோரை நினைவுகூர்ந்து அவர்களுக்காக வேண்டுதல் செய்கின்ற ஒரு சிறப்பு நாள் கல்லறைத் திருநாள் எனவும், புனித ஆத்துமாக்கள் தினம் எனும் அழைக்கின்றனர். 

கத்தோலிக்க திருச்சபையினர் வருடம்தோறும் நவம்பர் மாதம் 2ம் தேதி இறந்தோரை நினைவுகூர்ந்து, அவர்கள் விண்ணக பேரின்பத்தை அடைவதற்காக இறைவேண்டல் செலுத்தும் வழக்கம் தூய்மை பெறும் நிலைபற்றிய நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்ததாகும்.

"புனித ஆத்மாக்கள் தினம்" 

அதன்படி இன்று திருச்சி வேர்ஹவுஸ் கல்லறையில் மரித்த முன்னோர்கள் விண்ணகப் பேரின்பத்தை அடைவதற்கு முன் தங்கள் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்யும் "உத்தரிக்கிற ஸ்தலம்" என்று அழைப்பது வழக்கம் இறந்து உத்தரிப்பு நிலையில் வேதனைப்படும் உற்றார், உறவினர், நண்பர்களின் மற்றும் யாரும் நினையா ஆன்மாக்களை நினைவு கூர்ந்து அவர்களுக்காக இந்நாளில் கிறித்தவர் வேண்டுதல் செலுத்துகின்றனர். 

மரித்தவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளை வர்ணம் பூசி, மலர்களால் அலங்கரித்து வைத்துள்ளனர்.

இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்கள், மாநில இருந்தும் தங்கள் முன்னோர்கள், உறவினர்கள் கல்லறைக்கு வழிபாடு செய்ய வருகை தந்து தங்களது முன்னோரின் கல்லறையை அலங்கரித்து ரோஜா மற்றும் பூக்கள் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி ஊதுபத்தி ஏற்றி வழிபாட்டில் ஈடுபட்டனர்.

 

VIDEOS

Recommended