- முகப்பு
- மாவட்டச் செய்தி
- புவனகிரி பகுதியில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் விபத்து ஏற்படுத்தி உயிர்பலி வாங்க காத்திருக்கும் கொடூரம்.. கண்டு கொள்ளாத அதிகாரிகள்
புவனகிரி பகுதியில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் விபத்து ஏற்படுத்தி உயிர்பலி வாங்க காத்திருக்கும் கொடூரம்.. கண்டு கொள்ளாத அதிகாரிகள்
சண்முகம்
UPDATED: May 4, 2024, 10:05:41 AM
கடலூர் மாவட்டம் புவனகிரி, சேத்தியாத்தோப்பு, கீரப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதுப்பிக்கப்பட்ட பராமரிப்பு சாலைகள் செல்கின்றன.
இந்த சாலைகள் தற்போது அதிக வாகன போக்குவரத்து நிறைந்தவையாக இருக்கின்றன.
இவ்வாறான நிலையில் இந்த சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் சாலையோரமாகவும் போக்குவரத்திற்கு இடையூராகவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் போன்றவற்றிற்கு நகரத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நேரங்கள் வரையறுக்கப்பட்டுள்ள நிலையிலும் இவைகள் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் சாலையோரங்களில் நகரத்திற்குள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
இதனால் மற்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஆபத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நடந்து வருகிறது. சாலையோரங்களில் நிறுத்தப்படும் கனரக வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பலமுறை கோரிக்க வைத்த நிலையிலும் இதனை யாருமே கண்டு கொள்ளவில்லை.
இதுபோன்ற வாகனங்களால் கடந்த பல மாதங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளையும், விபத்துகளையும் கொஞ்சம் சீர்தூக்கி பார்த்தாலே தெரிய வரும்.
உடனடியாக துறை சார்ந்த அதிகாரிகள் மேற்கண்ட பகுதிகளில் சாலையோரங்களில் கனரக வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்த அனுமதிக்க வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வேதனையோடு கோரிக்க வைத்து வருகின்றனர்.