திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு.

அஜித் குமார்

UPDATED: May 9, 2024, 6:26:03 AM

Online Tiruvannamalai District News 

திருவண்ணாமலையில் வரலாறு காணாத கோடை வெயில் சுட்டெரிக்கிறது. அதிகபட்சமாக நேற்றும் 108 டிகிரி வெயில் பதிவானது. மேலும், பகலில் சாலைகளில் நடந்து செல்ல முடியாதபடி வெப்பக்காற்று வீசியது. அதனால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் தவித்து வருகின்றனர்.

கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் சாலைகளில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

Tiruvannamalai District News In Tamil

இது வாகன ஓட்டிகள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் திருவண்ணாமலையில் கோடை வெயில் 108 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கின்றது.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம், பெரியார் சிலை, மற்றும் போக்குவரத்து சிக்னல்கள் உள்ள இடங்களில் நீண்ட நேரமாக வாகனங்கள் காத்திருந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

Online District News In Tamil

அப்பகுதியில் வாகனங்கள் நீண்ட நேரமாக நிற்பதால் வாகன ஓட்டிகள் அனல் காற்று வீசும் நிலையில் அவதிக்குள்ளாகின்றனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் நீண்ட நேரம் சிக்னலில் நிற்கும் பொது மக்கள் வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக சாலையின் மேல் பகுதியில் பெரிய அளவில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது

இந்த பசுமை பந்தல் கடும் வெயிலில் சமாளிப்பதற்கு உதவியாக உள்ளதாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended