திருச்சி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை.

JK

UPDATED: May 31, 2024, 10:14:25 AM

நாமக்கல் மாவட்டம், வரகூரைச் சேர்ந்த 42வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர தலையில் அடிபட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 28ம் தேதி அன்று இரவு10மணி அளவில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பின்னர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டு, உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இறந்தவரின் உறவினர்கள் அவருடைய உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன் வந்தார்கள்.

மேலும் அவருடைய உறுப்புகளான கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் தோல் ஆகிய உறுப்புகளை தானம் செய்தனர்.

Transtan வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் வரிசையின்படி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இரண்டு வருடங்களாக தொடர்ச்சியாக இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க நோயாளிக்கு மருத்துவமனை முதல்வர் நேரு தலைமையில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவக்குழுவின் சிறுநீரக அறுவை சிகிச்சை ஜெயபிரகாஷ் நாராயணன்,

குழுவினர், சிறுநீரக மருத்துவ குழு மருத்துவர் நூர்முகமது, குழுவினர், மயக்கவியல் மருத்துவர் சந்திரன் மற்றும் குழுவினர் மற்றும் செவியலியர் குழு, செவிலியர் உதவியாளர் குழு ஆகியோர் மூலம் சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு நோயாளி நலமுடன் உள்ளார். 

இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையானது நமது மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 27வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகும்.

மற்றொரு சிறுநீரகம் தஞ்சாவூர் அரசுப் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், கல்லீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

கண்விழிகளும் இம்மருத்துவமனையில் இரண்டு பயனாளிகளுக்கு தானமாக வழங்க பெறப்பட்டது.

இறந்தவரின் உடலுக்கு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் அருண் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. 

இறுதி சடங்கு செய்வதற்காக உறவினர்கள் உடலை ஆம்புலன்ஸ் வேன் மூலம் கரூர் கொண்டு சென்றனர்.

திருச்சி அரசு மருத்துவமனையில் 18வது முறையாக மூளை சாவு அடைந்தவர் உடலில் இருந்து கல்லீரல், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் தோல் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended