- முகப்பு
- மாவட்டச் செய்தி
- இம்மாதம் 30ஆம் தேதியுடன் பணியில் இருந்து நீக்க அரசு முடிவு தொகுப்பு ஊழியர்கள் அதிர்ச்சி
இம்மாதம் 30ஆம் தேதியுடன் பணியில் இருந்து நீக்க அரசு முடிவு தொகுப்பு ஊழியர்கள் அதிர்ச்சி
சண்முகம்
UPDATED: Jun 27, 2024, 7:02:19 PM
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்2013 ஆண்டு தமிழக அரசு பல்கலைக்கழகத்தை கைப்பற்றியது இங்க பணிபுரியும் ஆசிரியர்கள் ஊழியர்கள் 9 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்
மற்றும் கல்லூரி தொழில்நுட்பத் துறை கல்லூரிகளுக்கும் படிப்படியாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது இதில் 200க்கும் மேற்பட்டோர் தொகுப்பு ஊழியர்களால் சுமார்12 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்கள்
இவர்களுக்கு மாதம் 8000 சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறார்கள் இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி முன்பிருந்த அண்ணா திமுக ஆட்சியிலும் பல போராட்டங்கள் நடத்தினார்கள் தமிழக முதல்வர் சிதம்பரம் வரும்போது நேரடியாக மனுக்கள் அளிக்கப்பட்டது
தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டது இதுவரை எந்த பலனும் காணப்படவில்லை
இது தொடர்பாக காட்டுமன்னார்கோயில் விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர் காவியச் செல்வன் மற்றும் சிதம்பர சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் பலமுறை சட்டமன்றத்தில் பேசியும் இதுவரை அவர்களுக்கு ஒரு நிரந்தர பணி வழங்கப்படவில்லை
இந்த நிலையில் தொகுப்பு ஊழியர்கள் இம்மாதம் 30ஆம் தேதியுடன் பணியில் இருந்து நீக்க அரசு முடிவு செய்துள்ளது
இது தொடர்பாக அரசின் நிதித்துறை பல்கலைக்கழக நிர்வாகங்கள் கடிதம் அனுப்பி உள்ளன இந்த தகவலால் தொகுப்பு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் இவர்கள் தற்பொழுது இதற்கு தடை உத்தரவு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நாடி உள்ளனர்
இவர்கள் சுமார் 10 லட்சம் 20 லட்சம் ரூபாய் முன்பிருந்த பல்கலைக்கழக ஸ்தாபனர்எம்ஏஎம் ராமசாமியிடம் தந்துவிட்டு தான் வேலைக்கு சேர்ந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.